தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் சிபிஎம் களத்தில் ஆர்.செல்லசுவாமி; பொதுமக்கள் உற்சாகம்

31 Mar 2026, 4:50 pm
பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் சிபிஎம்  களத்தில்  ஆர்.செல்லசுவாமி;  பொதுமக்கள் உற்சாகம்
<p><strong>பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் சிபிஎம் &nbsp;களத்தில் &nbsp;ஆர்.செல்லசுவாமி; &nbsp;பொதுமக்கள் உற்சாகம்</strong></p> <p>நாகர்கோவில், மார்ச் 31- கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் சிபிஎம் பிரதிநிதி இல்லை. இம்முறை அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது &nbsp;இம்மாவட்ட மக்களின் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்பேக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திருவட்டார் தொகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.லீமாறோஸ் வெற்றிபெற்றார். அதற்கு முன்பு திருவட்டார் தொகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமான ஜே.ஹேமச்சந்திரன் 4 முறை இங்கிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 இல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் ரப்பர் தோட்டம், முந்திரி தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய திருவட்டாறு தொகுதி நீக்கம் செய்யப்பட்டது. இது இங்குள்ள வாக்காளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. திருவட்டாறு தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் பத்மநாபபுரம் தொகுதியுடனும், ஒரு பகுதி விளவங்கோடு தொகுதியுடனும் இணைக்கப்பட்டன. பத்மநாபபுரம் நகராட்சி தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.நூர்முகமது 1989 இல் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் திமுக அரசும் சட்டமன்றமும் கலைக்கப்பட்டது. &nbsp;அதைத் தொடர்ந்து &nbsp;1991-இல் நடந்த தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் எஸ்.நூர்முகமது, திருவட்டாறில் ஜே.ஹேமச்சந்திரன், விளவங்கோடில் டி.மணி ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால் வெற்றிவாய்ப்பை மூவரும் இழந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவான அடித்தளமும், மக்கள் செல்வாக்கும் மாவட்டத்தில் உள்ளது. அதோடு கூட்டணி பலமும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம். இது 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஏ.வி.பெல்லார்மின் வெற்றியிலும் பிரதிபலித்தது. &nbsp;இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் இருந்து தமிழக சட்டமன்றத்தில் சிபிஎம் பிரதிநிதிகள் இல்லா நிலையில் 2026 தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. வேட்பாளராக &nbsp;ஆர்.செல்லசுவாமி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியின் சிபிஎம் வேட்பாளராக ஆர்.செல்லசுவாமி (66) போட்டியிடுகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக உள்ளார். எம்.ஏ.பட்டதாரியான இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு மாவட்டம் முழுவதும் நன்கு அறிமுகமானவர். மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் தேர்வாகி செயல்பட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியின் பகுதியாக இணைக்கப்பட்ட ஏழுதேசம் பேரூராட்சி தலைவராக பத்தாண்டு காலம் பணியாற்றியவர். வைக்கல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராக 15 ஆண்டு காலம் திறம்பட செயல்பட்டு நன்மதிப்பை பெற்றுள்ளார். காஞ்ஞாம்புறத்தை சொந்த ஊராகக் கொண்ட ஆர்.செல்லசுவாமிக்கு பிஎச்டி படிக்கும் மகள் ஆதித்தியா, பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மகன் ஆஷிக் ஆகியோர் உள்ளனர். மனைவி லலிதா, தந்தை ராமையன், தாயார் கவுசல்யா ஆகிய மூவரும் மறைந்துவிட்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.