தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெள்ளையனே வெளியேறு நாளின் பேரெழுச்சி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் கைதான விவசாயிகள்- தொழிலாளர்கள்! ஆகஸ்ட் 10 ‘சிறை நிரப்பும் போராட்டம்’ மாபெரும் வெற்றி!

10 Aug 2026, 9:04 pm
வெள்ளையனே வெளியேறு நாளின் பேரெழுச்சி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் கைதான விவசாயிகள்- தொழிலாளர்கள்! ஆகஸ்ட் 10 ‘சிறை நிரப்பும் போராட்டம்’ மாபெரும் வெற்றி!

வெள்ளையனே வெளியேறு நாளின் பேரெழுச்சி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் கைதான விவசாயிகள்- தொழிலாளர்கள்! ஆகஸ்ட் 10 ‘சிறை நிரப்பும் போராட்டம்’ மாபெரும் வெற்றி!

புதுதில்லி, ஆக. 10-வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ நாளின் மறு தினமான ஆகஸ்ட் 10-ம் தேதியன்று, மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து அறைகூவல் விடுத்தநாடு தழுவிய‘சிறை நிரப்பும் போராட்டம்’ அசாத்தியமான மக்கள் எழுச்சியுடன் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்து திரண்ட உழைக்கும் மக்களின் எஃகு போன்ற உறுதியான ஒற்றுமை,ஒடுக்குமுறை அரசதிகாரத்தை எதிர்த்து நின்ற விதம் இந்திய வரலாற்றில் புதியதொரு புரட்சிகர அத்தியாயத்தை எழுதியுள்ளது என்றால் மிகை யல்ல.

முழக்கங்களால் அதிரும் இந்தியா: அகில இந்திய அளவில் வெடித்த மக்கள் போராட்டம்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம்,ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், தில்லி, புதுச்சேரி மற்றும்திரிபுரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகக் களமிறங்கினர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும்இந்த மாபெரும் போர்க்களத்தில் கைகோர்த்தனர்.

மோடி அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் காட்டிய இந்த வீரஞ்செறிந்த எதிர்ப்பு, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியெடுத்துள்ளது.

தமிழகம் முதல் தில்லி வரை: பல்லாயிரக்கணக்கில் கைதான போராளிகள்

நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களின் வீரியம் வரலாறு காணாத அளவில் இருந்தது.

ராஜஸ்தான் மற்றும் பீகார்: ராஜஸ்தானின் சிகார் பகுதியில் பெண்கள் உட்பட 4,000 விவசாயிகளும், பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 2,000 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மகாராஷ்டிரா & ஹரியானா: சந்திரபூரில் 1,200 அங்கன்வாடிப் பணியாளர்கள், 90 ஆஷா பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 1,400 பேர் கைது செய்யப்பட்டனர். ஹரியானாவின் பிவானியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிதிச்செயலாளர் பி. கிருஷ்ணபிரசாத் தலைமையில் 1,500 தொழிலாளர்களும் விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

கேரளா; மேற்குவங்கம் : தெலுங்கானாவின் கம்மம், ஹைதராபாத், நல்கொண்டா; கேரளாவின் திருவனந்தபுரம், திருச்சூர், கோட்டயம், கண்ணூர்; மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவின் அகர்தலா என எங்கு பார்த்தாலும் உழைக்கும் மக்களின்எதிர்ப்பலைகள் அலைமோதின.

காவல்துறையின் அடக்குமுறைகளைத் தாண்டி மாபெரும் எழுச்சி!

மோடி அரசின் அச்சுறுத்தல்களையும், காவல்துறையின் கடுமையான அடக்குமுறைகளையும் மீறிப் போராளிகள் காட்டிய வீரம் சிலிர்க்க வைப்பதாக இருந்தது.கேரளத்தின் கோழிக்கோட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் உள்ளிட்டதலைவர்கள் தலைமையேற்றனர். மகா ராஷ்டிராவின் தகானுவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் பாதல் சரோஜ் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம்ரயில் கோடூரில் காவல்துறையின் தடுப்புகளை மீறிச் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுமற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேற்கு வங்கம், பச்சிம் மேதினிபூர் பகுதியில் மட்டும் 10,000 பேரைக்கைது செய்யக் காவல்துறையினர் திட்டமிட்டி ருந்ததாகத் தகவல்கள் வெளியானது, அங்கே மக்கள் திரண்டவெள்ளத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துரைக்கிறது.

தியாகிகளின் நினைவும், சமரசமற்ற முழக்கங்களும்!

1942 ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத் தியாகிகளுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்தஇப்போராட்டம், மோடி அரசின் கார்ப்பரேட் அடிமைத்தனத்திற்குச் சாவுமணியாகஒலித்துள்ளது. இந்த எழுச்சியின் முழக்கங் களாக உழைக்கும் மக்கள் பின்வரும் கோரிக்கைகளை எழுப்பினர்:

• தாராளமய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு கடும் எதிர்ப்பு! கார்ப்பரேட்டுகளே விவசாயத்தை

விட்டு வெளியேறு!

• விவசாயிகளின் நில உரிமைகளைப் பாதுகாத்திடு! அனைத்து விளைபொருட்களுக்கும் சி2+50% கோட்பாடு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டப்பூர்வமாக்கு!

• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை மீட்டெடு; ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், ரூ. 700 தினக்கூலியும் வழங்கு!

• விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்! தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கு!தொழிலாளர்களைச் சிதைக்கும் 4 புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்! அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 42,000 வழங்கு!மின்சாரத் தனியார்மயமாக்கல் மற்றுமப்ரீ-பெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களைத் தடை செய்! புதிய விதை மசோதா 2025-ஐ திரும்ப பெறு! என முழங்கினர்.

காவல்துறையின் அடக்குமுறைகளையும், ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், ஆகஸ்ட் 10 ‘சிறை நிரப்பும் போராட்டம்’ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.