தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கால் நூற்றாண்டு பேரழிவுகளும் புதிய பன்முக உலக ஒழுங்கும்!

13 Sept 2026, 10:22 pm
கால் நூற்றாண்டு பேரழிவுகளும் புதிய பன்முக உலக ஒழுங்கும்!

கால் நூற்றாண்டு பேரழிவுகளும் புதிய பன்முக உலக ஒழுங்கும்!

சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அசைக்க முடியாத வல்லரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட அமெரிக்கா, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல் களுக்குப் பின்னர் தொடர்ந்தபோர்களின் சுமையால் தன் மேலாதிக்கத்தை இழந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுத்த ‘பயங்கரவாதத்திற்குஎதிரான உலகளாவிய போர்’, அந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற் படுத்துவதற்குப் பதிலாக பன்னாட்டுப் பயங்கரவாதக் குழுக்களை மேலும் பல சிதறல்களாகப் பரவச் செய்தது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது அதன் பலவீனமாகக் கருதப் பட்ட நிலையில், தனது தோல்வியை மறைக்கவும் மேலாதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்கவும் அமெரிக்காவின் தொடர் போர்கள் உலகின் பாதுகாப்புச் சூழலை மேலும் சீர்குலைத்துள்ளன.

இராக், லிபியா, சிரியா மற்றும் ஈரான் மீதான

போர்கள் மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிராந்தியங்களை மீள முடியாத வன் முறைச் சுழலிலும் சிதைவிலும் தள்ளின. சதாம் உசேன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் ஈரானின் செல்வாக்கு இராக்கில் பன்மடங்கு பெருகியதுடன், லிபியாவில் ஏற்பட்ட அமெரிக்க கைக்கூலி பயங்கரவாதிகளின் ஆட்சி ஆப்பிரிக்கா முழுவதும் ஆயுதக் கடத்தலையும் பயங்கரவாதக் குழுக்களின் எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது அமெரிக்காவின் நேரடித் தோல்வியின் சான்றாகும். இதற்கிடையில், சீனா பொருளாதார மற்றும் ராணுவ ரீதியில் அசுர வளர்ச்சியைப் பெற்று உலகின் வலுவான சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது

ஹமாஸ் தொடுத்த தாக்குதலைத் தொடர்ந்து, காசா மற்றும் மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நடத்தும் முழு அளவிலான போரும், பிப்ரவரி 2026-ல் ஈரானைத் தாக்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுச் சதிநடவடிக்கைகளும் அமெரிக்காவை மற்றொரு “சதுப்பு நிலத்தில்” ஆழ்த்தியுள்ளன என்பதே உண்மை. இஸ்ரேலின் நெருக் கடிக்கு இணங்கி பிராந்தியக் குழப்பங்களில் மாட்டிக்கொண்டுள்ளவாஷிங்டன், மாறிவரும் உலக யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்னும் ஒருமுனை ஏகாதிபத்திய மனநிலையிலேயே இயங்க முயல்கிறது. ஆனால், உக்ரைன் முதல் மேற்கு ஆசியா வரை அமெரிக்காவின் ஒற்றையாதிக்கப்போக்கு கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது.

9/11 தாக்குதலுக்குப் பிறகு கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்ட இந்தத் தொடர் போர்களும் ஆக்கிரமிப்புகளும் உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சீரழிவையும் எண்ணற்ற மனிதப் பலிகளையும் மட் டுமே பரிசாக அளித்துள்ளன. பாரம்பரிய நட்பு நாடுகள் கூட அமெரிக்காவின் வர்த்தக மற்றும் ராணுவக் கொள்கைகளால் அதிருப்தியடைந்து வரும் சூழலில், மாறிவரும் பன்முக உலக ஒழுங்கை அமெரிக்கா இனியும் தடுத்து நிறுத்த முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.