தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குவாரிகள் மூடலால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ. 100 அதிகரிக்கும் அபாயம்

28 May 2026, 9:43 pm
குவாரிகள் மூடலால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ. 100 அதிகரிக்கும் அபாயம்

குவாரிகள் மூடலால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ. 100 அதிகரிக்கும் அபாயம்

சென்னை, மே 28 - குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் ஜல்லி, எம்-சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் பல குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் கட்டுமானத் துறையில் பெரிய தாக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஜல்லி, எம்-சாண்ட் போன்ற அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக கட்டிடம் கட்டும் செலவு சதுர அடிக்கு ரூ. 100 வரை கூடும் அபாயம் இருப்பதாக கட்டுமானத் துறை யினர் கவலை தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத கல் எடுப்பை அரசாங்கம் கட்டுப்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால், அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு, ஜல்லி தேவை - 50,000 முதல் 60,000 லோடுகள், எம்-சாண்ட் தேவை - 60,000 முதல் 70,000 லோடுகள் இந்த அள விலான தேவைக்கு போதுமான உற்பத்தி இல்லாத நிலை ஏற்பட்டால், மிகப்பெரிய தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது

. இதனால் கட்டுமானப் பணிகள் தாமதம், பொருட்களின் விலை உயர்வு, வீடு கட்டும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை, தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்ற பிரச்ச னைகள் உருவாகலாம்.

எனவே அரசு உடனடி மாற்று ஏற்பாடுகள், புதிய அனுமதிகள், கண்காணிப்பு முறைகள் மற்றும் கட்டுமானத் துறையினருடன் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டியது அவசியமாகி யுள்ளது” என்று வெங்கடாசலம் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.