சென்னை விரைவு செய்திகள்
15 Nov 2025, 4:09 pm

தங்கம் விலை ரூ.1,520 குறைந்தது

சென்னை, நவ.15– சென்னையில் சனிக் கிழமையன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கு செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டது.

லாரியில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர், நவ.14- பழவேற்காடு செஞ்சி யம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது. குடிநீர் லாரியில் சிக்கி குழந்தை விசித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நவ.30 வரை கண் பரிசோதனை

சென்னை, நவ.15- உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் படல நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஷ்வின் அகர்வால், மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவர் டாக்டர் சவுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என்றும், மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் அதற்கான கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது. இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.25 கோடி காப்பீட்டு மோசடி கண்டுபிடிப்பு

சென்னை, நவ. 15- பொதுக் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட், ரூ.25 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய மோட்டார் விபத்துக் காப்பீட்டு மோசடியை கண்டறிந்துள்ளது. புஜ் நகரிலுள்ள மோட்டார் விபத்துக் கோரல் தீர்ப்பாயத்தில் போலியான மூன்றாம் தரப்பு நஷ்டஈடு கோரிக்கைகள், ஜோடிக்கப்பட்ட முதல்தகவல் அறிக்கை மற்றும் தவறான ஆவணங்கள் மூலம் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒரு கார் விபத்தில் சக ஓட்டுநர் இறந்ததாகக் கூறி, அவரது சட்ட வாரிசுகள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். நிறுவனம் உள் விசாரணை நடத்தியதில், விபத்து மற்றும் ஆவணங்கள் சந்தேகத்திற்குரியவை எனக் கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிஐடி குற்றப் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு) விசாரித்தது.விசாரணையில், விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் தவறான எப்ஐஆர் பதிவு செய்ததும், ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்ததும் உறுதியானது. இதையடுத்து, பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், சதித்திட்டம் மற்றும் மோசடி முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் காப்பீடு செய்த நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராகத் உறுதியான நடவடிக்கை எடுக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளதுடன், அனைத்துப் பாலிசிதாரர்களும் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தள்ளுவண்டிக் கடைகளுக்கு தரச் சான்றிதழ் கட்டாயம்

சென்னை, நவ.15- தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவு பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்றிதழ் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சான்றிதழ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆன்லைனில் இலவசமாக சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.