குவாட் அமைச்சர்கள் கூட்டம் : அரிய கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்!
27 May 2026, 8:18 pm

குவாட் அமைச்சர்கள் கூட்டம் : அரிய கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்!

இந்திய தலைநகர் தில்லியில் குவாட் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் அரிய கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடு க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங், ஜப்பானிய வெளி யுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, கடல்சார் கண்காணிப்பு மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், முக்கியமான கனிமங்கள், ஆற்றல் துறை களில் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்த வும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது ஊடக அறிக்கை யில், ‘இந்தோ-பசிபிக் கடல்சார் கண்காணிப்பு கூட்டு முயற்சி’ என்ற (ராணுவ) திட்டத்தைத் தொடங்க குவாட் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டறிக்கை அமைச்சர்களின் கூட்டத்திற்குப்பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாதத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், அதை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தன.

“எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று இந்தியாவின் பஹல் காமிலும், 2025 டிசம்பர் 14 அன்று ஆஸ்திரேலியாவின் போண்டி பீச்சிலும் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட, பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-அமெரிக்கா கனிம ஒப்பந்தம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர், முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் (Rare earths) சுரங்கம் மற்றும் பதப்படுத்துதல், விநியோகத்தைப் பாதுகாப்பது தொடர்பான ‘இந்தியா-அமெரிக்கா முக்கிய கனிமங்கள் கட்டமைப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சர்வதேசச் சந்தையில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் போட்டிக்கு அரிய கனிம வளங்கள் மிக அவசியமாகும்.

தற்போது இக்கனி மங்களின் மீதான 90 சதவிகித கட்டுப்பாடு சீனா வசமே உள்ளது. இந்நிலையில் இந்திய மண்ணில் உள்ள கனிமங்களை தோண்டி எடுக்க வும் பங்கு போட்டுக்கொள்ளவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துடித்து வருகின்றன.

ஏற்கெனவே 2026 பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற “ஏஐ இம்பாக்ட் சம்மிட்” மாநாட்டில் அமெரிக்கா தலைமை யிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ (Pax Silica) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலி பாதுகாப்புக் கூட்டணியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

மூன்றாவது நாட்டை குறி வைக்கக் கூடாது: சீனா

நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பிராந்திய அமைதி, உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டுமே தவிர, எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைக்கக்கூடாது என்று சீனா கூறியுள்ளது.

“பிரத்யேகமான குழுக்கள் (Cliques) உருவாக்கப்படுவதையோ அல்லது நாடுகளின் கூட்டணிகளுக்கு இடையேயான மோதல்களையோ நாங்கள் ஆதரிக்கவில்லை.

எந்தவொரு கூட்டுறவும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் குலைப்பதாக இருக்கக் கூடாது,” என்று குவாட் கூட்டமைப்பு குறித்து சீனாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடபாளர் மாவோ நிங் (Mao Ning) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த குவாட் அமைப்பு சீனாவை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ராணுவக்கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.