‘குவாட்’ வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் பிரதமர் மோடி, ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை
24 May 2026, 9:59 pm

‘குவாட்’ வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் பிரதமர் மோடி, ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை

புதுதில்லி, மே 24 - அமெரிக்கா தலைமையிலான குவாட் (Quad) கூட்டமைப்பின் வெளி யுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

சர்வதேச அர சியல் மற்றும் வர்த்தகச் சூழலில் இந்தச் சந்திப்புகள் மிக முக்கியத்து வம் வாய்ந்ததாகப் பார்க்கப்படு கின்றன.

குவாட் என்பது அமெரிக்கா தலைமையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட அமைப்பு ஆகும்.

இது சீனா உள்பட ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவையும் ஒரு கூட்டாளியாக பயன்படுத்தி அமெரிக்கா தனது ராணுவ சூழ்ச்சித் திட்டங்களை அரங்கேற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது.

கொல்கத்தாவில் பயணத் துவக்கம்; தில்லியில் சந்திப்பு அமெரிக்க வெளியுறவு அமைச்ச ராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியா விற்குத் தனது முதலாவது நான்கு நாள் பயணமாக வந்துள்ள மார்கோ ரூபியோ, தனது பயணத்தை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் தலைமையகமான ‘அன்னை இல்லத்திற்கு’ சென்று தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஞாயிறன்று புதுதில்லி வந்தடைந்த அவர், ‘சேவா தீர்த்’ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்திய வெளியுறவு டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையிலான இரு நாட்டு உயர்மட்டக் குழுவினருக்கு இடையே யான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியாவின் 5 அம்சக் கொள்கை: ஜெய்சங்கர் விளக்கம் மாநாட்டின் இடையே செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியப் பிரச்சனை களில் இந்தியாவின் ஐந்து அம்ச அணுகுமுறையைத் தெளிவுபடுத்தி னார்.

உலகளாவிய மோதல்களுக்குத் தீர்வு காண இந்தியா எப்போதும் பேச்சு வார்த்தை மற்றும் ராஜதந்திர வழி முறைகளையே ஆதரிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், சர்வதேசக் கடல்சார் வர்த்தகம் எவ்விதத் தடையுமின்றித் தொடர வேண்டும் என்றார்.

மேலும், வர்த்தகம் மற்றும் இயற்கை வளங்களைச் சில நாடுகள் தங்களுக்குச் சாதகமாக ஆயுதமாகப் பயன்படுத்துவதை இந்தியா கடுமை யாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேற்காசியப் போர் விரைவில் முடிவு? செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மேற்காசியப் போரை அதிகாரப்பூர்வமாக முடி வுக்குக் கொண்டுவரும் வகையில் ஈரானுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித் தார்.

“ஈரான் இந்த ஒப்பந்தத்தை இன்னும் சில நாட்களில் ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம்; நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்ட அவர், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹோர்முஸ் நீரிணை’ எவ்விதக் கட்டணமும் இன்றி, திறந்தவெளிப் பாதையாகச் செயல்படுவதை உறுதி செய்யத் தங்களது அரசு முயற்சித்து வருவ தாகக் கூறினார்.

இனவெறிக் கருத்துகளுக்குக் கண்டனம் அண்மைக்காலமாக இந்தியர் களுக்கு எதிராகக் கூறப்பட்டு வரும் இனவெறி சார்ந்த கருத்துகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, அமெரிக்கா எப்போதும் எல்லோரை யும் “வரவேற்கும் ஒரு நாடு” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தியர் களுக்கு எதிராக அத்தகைய இன வெறிக் கருத்துகளைப் பரப்புபவர்கள் “அறிவற்றவர்கள்” (Stupid) என்றும் அவர் சாடினார்.

இதனிடையே $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: காங்கிரஸ் விமர்சனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக மார்கோ ரூபியோ தெரிவித்த கருத்தைக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

தனது “நெருங்கிய நண்பரை” (அமெரிக்காவை) திருப்திப்படுத்து வதற்காக, நாட்டின் நலன்களில் சமரசம் செய்துகொண்டு பிரதமர் மோடி இந்த எல்லையைத் தாண்டிய வர்த்தக உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டு ள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. (பிடிஐ)