தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கியூ.எஸ். உலகளாவிய தர வரிசை வெளியீடு விஐடி பல்கலைக்கழகத்துக்கு 119ஆம் இடம்

27 Mar 2026, 3:15 pm
கியூ.எஸ். உலகளாவிய தர வரிசை வெளியீடு விஐடி பல்கலைக்கழகத்துக்கு 119ஆம் இடம்
<p><strong>கியூ.எஸ். உலகளாவிய தர வரிசை வெளியீடு விஐடி பல்கலைக்கழகத்துக்கு 119ஆம் இடம்</strong></p> <p>வேலூர், மார்ச் 27- கியூ.எஸ். உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசை பட்டியலில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் தமிழ்நாட்டின் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 119ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான &lsquo;கியூ.எஸ்.&rsquo;(குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) 2026ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக பாடப் பிரிவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 17 பாடப்பிரிவுகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வாகி உள்ளது. இதுகுறித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறியதாவது: கியூ.எஸ். உலக பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசைப் பட்டியலில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறி உலகளவில் 119ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அளவிலான தரவரிசையில் 6ஆம் இடம் ஆகும். இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பாட பிரிவில் 86ஆவது இடமும், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாட பிரிவில் 87ஆவது இடமும் என 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. அதே போல், கணிதவியலில் 104ஆவது இடமும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 101 முதல் 200 வரையிலும், மெட்டீரியல் சயின்ஸ் 137ஆவது இடமும் பிடித்துள்ளது. மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல் அண்ட் மேனுபேக்சரிங் பிரிவில் 148ஆவது இடமும் என 200 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் 6ஆவது இடமும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆர்ட் அண்ட் மற்றும் டிசைன் 201-300, சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 201-275ஆம் இடம் பிடித்துள்ளது. கெமிக்கல் பாட பிரிவில் 201-250, வேதியியல் மற்றும் இயற்பியல், வானியல் பாட பிரிவுகளில் 251-300 தர வரிசையும், புள்ளியியல், செயல்பாட்டு ஆராய்ச்சியில் 251-275, பயாலாஜி கல் சயின்சஸ் 301-350, சுற்றுச்சூழல் அறிவியல் 351-400, மருத்துவ பாட பிரிவில் 551-600 தரவரிசையில் இடங்களை பிடித்துள்ளன. கியூ.எஸ் தரவரிசை முன்னேற்றத்திற்கு பல்கலைக்கழகத்தின் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளது. மேலும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சி ஆகியவையும் தரவரிசை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாகும் இவ்வாறு விசுவநாதன் கூறியுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.