செம்மொழி பூங்காவில் கியூ.ஆர் கோடு அறிமுகம்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>செம்மொழி பூங்காவில் கியூ.ஆர் கோடு அறிமுகம்</strong></p>
<p>கோவை, டிச.14– செம்மொழி பூங்காவில் பொதுமக்கள் நுழைவுச் சீட்டை கியூ.ஆர் கோடு மூலமாக எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் பகுதியில் கடந்த டிச.11 முதல் பொதுமக்கள் பார்வையிட செம் மொழி பூங்கா திறக்கப்பட்டது. 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா, தமிழின் செம் மொழி அந்தஸ்தை கொண்டாடும் வகை யில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் கியூ. ஆர் கோடு (விரைவு எதிர்வினை குறி) பொருத்தப்பட்டு, அதை ஸ்கேன் செய்து தாவரங்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இப்போது நுழைவுச் சீட்டுக்காக வும் கியூ.ஆர் கோடு அடிப்படையிலான ஆன் லைன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் கூறு கையில், பூங்காவை நவீனமயமாக்கும் வகை யில் கியூ.ஆர் கோடு வசதி அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எளி தாக சீட்டு பெற்று, நீண்ட நேரம் காத்தி ருக்க வேண்டிய அவசியம் இல்லை. பூங்கா வில் ஏஐ அடிப்படையிலான விளையாட்டு மையம், 12D தியேட்டர் போன்றவை விரை வில் சேர்க்கப்பட உள்ளன, என்றார். பூங்கா திறந்த நாளில் இருந்தே ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். இந்த புதிய கியூ.ஆர் கோடு வசதி, கோவை மக்களுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
