முந்தய பக்கம்

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 12 இந்தியர்கள் உயிரிழப்பு

23 Jun 2026, 1:56 pm
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 12 இந்தியர்கள் உயிரிழப்பு
<p>கத்தாரில் உள்ள எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் பார்சன் எரிவாயு ஆலையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும், 66 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என கத்தார் நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>விபத்துக்குள்ளான இந்த எரிவாயு ஆலை, திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) மற்றும் பிற ஏற்றுமதி பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram