கோரிக்கைகளை நிறைவேற்றுக! பொதுப் பணித்துறை கணக்கு, ஆட்சிப் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
1 hour before
<p><strong>கோரிக்கைகளை நிறைவேற்றுக! பொதுப் பணித்துறை கணக்கு, ஆட்சிப் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>திருச்சிராப்பள்ளி: உதவியாளர் நேரடி நியமனத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 28 அன்று மாநில அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தொடர் போராட்டத் தீர்மானங்கள் பொதுப் பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சி யில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ. செல்வம் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் சோ. முருகா னந்தம் வரவேற்றார். பொதுச் செய லாளர் கோ. கோமதிநாயகம் செயல் அறிக்கையை வாசித்தார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் முனை வர் கா. பால்பாண்டி துவக்கவுரை ஆற்றினார். உதவியாளர் நேரடி நியமனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; அரசாணை 69-ஐ ரத்து செய்து பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும்; பி.டபுள்யு.டி மற்றும் டபுள்யு.ஆர்.டி ஊழியர்களுக் கும் கலந்தாய்வு மூலம் பணிமாறு தல் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூ தியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 14, 15 தேதிகளில் அமைச்ச ரிடம் மனு அளிப்பது, ஜூலை 28-இல் மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 4, 5 தேதி களில் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்வது மற்றும் ஆகஸ்ட் 28 அன்று மாநில அளவிலான உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம். வேலு மணி தீர்மானங்களை முன்மொழிந் தார். கு. ரெங்கப்பன் நன்றி கூறினார்.</p>
