பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான
30 Oct 2026, 11:52 pm
<p>பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான ஊதிய ஒப்பளிப்பை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. இராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் இராம.வெங்கடபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
