பொதுப் பணித்துறை ஊழியர்களுக்கு அக்டோபர் மாதச் சம்பளம் வழங்குவதில் தாமதம்: சங்கம் கண்டனம்!
30 Oct 2026, 10:35 pm

பொதுப் பணித்துறை ஊழியர்களுக்கு அக்டோபர் மாதச் சம்பளம் வழங்குவதில் தாமதம்: சங்கம் கண்டனம்!

இராமநாதபுரம், அக். 30 –பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அக்டோபர் மாதச் சம்பளத்தை உரிய தேதியில் வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளமைக்குத் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும்ஆட்சிப்பணியாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஹ. அப்துல் நஜ்முதீன் வெளியிட்டுள்ள செய்தியில், தலைமைப் பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் பொதுப்பணித்துறையில், சம்பள ஒப்பளிப்பு ஆணை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். நீர்வளத்துறையில் கடந்த அக்டோபர் 22-லேயே சம்பள ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதே அரசின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறையில் மட்டும் இத்தகையதாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அக்டோபர் மாதச் சம்பளத்தை நம்பியே குடும்பச் செலவுகள், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள், பண்டிகைக் காலச் செலவுகள் மற்றும் வங்கிக் கடன் தவணைகளை எதிர்நோக்கியுள்ள ஊழியர்கள், சம்பளம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுஉள்ளனர். IFHRMS மென்பொருள் நடைமுறைகளைக் காரணம் காட்டி

ஊழியர்களின் சம்பள உரிமையைப் பறிக்கும் நிர்வாக அலட்சியம் ஏற்புடையதல்ல.

எனவே, பொதுப்பணித்துறை ஊழியர்களின் அக்டோபர் மாதச் சம்பளம் உரிய தேதியில் கிடைப்பதற்கான சம்பள ஒப்பளிப்பு ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிர்வாகத் தாமதத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்சங்கம் கோரியுள்ளது.