தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு

6 Jun 2026, 9:00 pm
புதிர் விளையாட்டு

புதிர் விளையாட்டு

தங்கங்களே, உங்களுக்காக இந்த வாரம் கொஞ்சம் ஆழமாக யோசிக்க வேண்டிய கதைப் புதிர் ஒன்று இதோ! புத்திசாலிகளான நீங்கள் விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள்தானே?

சிலையின் நகையைத் திருடியவர் யார்?

‘பவளத்தீவு’ என்ற அழகான தீவு ஒன்று இருக்கிறது. அங்கே பெரியதொரு மாளிகை, விளை யாட்டு மைதானம், நீச்சல் குளம் எல்லாம் உண்டு. விடுமுறை நாட்களில் பெரிய பணக்காரர் களும் உயர் அதிகாரிகளும் அங்கே வந்து தங்குவார்கள். மாளிகையின் விசாலமான நடுக்கூடத்தில் நடனமாடும் ஒரு பெண்ணின் சிலை இருக்கிறது. அந்தச் சிலையின் கழுத்தில், விலையுயர்ந்த வைரச் சங்கிலி எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கும். அங்கு வரும் விருந்தினர்களும் சுற்றுலாப் பயணிகளும் அந்தச் சிலையை வெகுநேரம் ரசித்துப் பார்ப்பார்கள். ஒருநாள் காலையில் சிலையின் கழுத்தில் இருந்த அந்த வைர நகையைக் காணவில்லை! மாளிகை உரிமையாளர், அங்கே வேலை செய்யும் பணியாளர்களில் யாரோ ஒருவர்தான் அதை எடுத்திருப்பார் என்று சந்தேகப்பட்டார். உடனே காவல்துறை புலனாய்வாளர் வரவழைக்கப்பட் டார். மாளிகையை நன்கு சுற்றிப் பார்த்த புலனாய்வாளர் உரிமையாளரிடம், “ஏன் பணியாளர்கள் மீது மட்டும் சந்தேகப்பட வேண்டும்? இங்கே தங்கியிருக்கும் விருந்தினர்களில் கூட யாராவது ஒருவர் எடுத்திருக்கலாம். நான் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன்,” என்றார். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தன் காரிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்த புலனாய்வாளர், அதை நடுக்கூடத்து மேசையின் மேல் வைத்தார். விருந்தினர்கள், பணியாளர்கள் எல்லோரையும் அழைத்து மேசையைச் சுற்றி நிற்கச் சொன்னார். அந்தப் பெட்டியிலிருந்து ஒரே நீளமுள்ள பல மூங்கில் குச்சிகளை எடுத்தார். ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார். பிறகு அவர், “இவை யெல்லாம் சாதாரண குச்சிகள் அல்ல; நவீன ‘செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) குச்சிகள்! யார் நகை யைத் திருடினார்களோ, அவர் கையில் இருக்கும் குச்சி மட்டும் நாளை காலைக்குள் இரண்டு சென்டிமீட்டர் நீளம் வளர்ந்திருக்கும். அதை வைத்துத் திருடியவர் யாரென்று எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்!” என்று அறிவித்தார். மறுநாள் காலையில் எல்லோரும் வந்து மறுபடியும் மேசையைச் சுற்றி நின்றார்கள். புலனாய்வாளர் ஒவ்வொருவரிடமிருந்தும் மூங்கில் குச்சியை வாங்கிப் பார்த்தார். ஒரு விருந்தினரிடமிருந்து பெற்ற குச்சியைப் பார்த்த புலனாய்வாளர், “இவர்தான் நகையைத் திருடியவர்,” என்று உரக்கக் கூறினார். அந்தப் பணக்காரரும் உண்மையை ஒப்புக்கொண்டு தலைகுனிந்து நின்றார். அந்தப் பணக்காரர்தான் குற்றவாளி என்று புலனாய்வாளர் எப்படிக் கண்டுபிடித்தார்?

விடை

மூங்கில் குச்சி உண்மையாகவே வளராது அல்லவா? ஆனால், புலனாய்வாளர் சொன்ன செயற்கை நுண்ணறிவுக் கதையை அந்தப் பணக்காரர் நம்பிவிட்டார். இரவோடு இரவாகத் தன்னிடமிருந்த குச்சியில் இரண்டு சென்டிமீட்டரை வெட்டி எறிந்துவிட்டார். அப்படிச் செய்துவிட்டால், காலையில் மற்ற குச்சிகள் அப்படியே இருக்க, வளர்ந்துவிட்ட தன் குச்சியும் சம நீளத்தில் இருக்கும். நாமும் தப்பித்துவிடலாம் என்று கணக்குப்போட்டார். ஆனால் திருடாத மற்றவர்களுடைய குச்சிகள் பழைய நீளத்திலேயே இருக்க, திருடியவரின் குச்சி மட்டும் இரண்டு சென்டிமீட்டர் குறைவாக இருந்தது! அதை வைத்து அவர்தான் குற்றவாளி என்று புலனாய்வாளர் கச்சிதமாகக் கண்டுபிடித்தார். மற்றவர்களைப் போல பணியாளர்கள் மீது சந்தேகம் கொள்ளாமல், அறிவியல் பூர்வமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்த புலனாய்வாளரையும், சரியான விடையைக் கண்டுபிடித்த செல்லங்களையும் பாலர் பூங்கா மனமாரப் பாராட்டுகிறது!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.