தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு - மஞ்சு

9 May 2026, 2:29 pm
புதிர் விளையாட்டு - மஞ்சு

கவே, சென்ற வாரம் ஆடு–புலி–புல்லுக்கட்டு பார்த்தோமே, அதே போல இன்றைக்கும், இனிமேல் வரக்கூடிய ஞாயிற்றுக் கிழமைகளிலும் கதைப் புதிர் பகிர்ந்துகொள்வோம். சரியா?

பசி அடங்காத, தாகம் எடுக்காத விசித்திர விலங்கு!

ஒரு அடர்ந்த காட்டில் திடீரென்று ஒரு விசித்திரமான விலங்கு ஒன்று தோன்றியது. உடல் முழுக்கவும் சிவப்பு – மஞ்சள் கோடுகள் தீட்டியிருந்த அந்த விலங்கு பயங்கரப் பசியோடு சுற்றியது. கண்ணில் பட்டதையெல்லாம் விழுங்கியது. காட்டுவாசிகள் தங்களையும் அது விழுங்கிவிடாமல் தடுக்க விரும்பினார்கள். மரம், செடி, மரக்கட்டை என்று என்னென்னவோ எடுத்து அது சாப்பிடு வதற்காகக் கொடுத்தார்கள். அதையெல்லாம் விழுங்கிய பிறகும் அதற்குப் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் பல பொருள்களை அதன் வாயில் போட்டார்கள். அப்போதும் பசியோடு அலைந்தது. விழுங்க விழுங்க சிவப்பும் மஞ்சளுமாய்ப் பெரிதாக வளர்ந்தது.

என்ன செய்யலாம் என்று எல்லோரும் கவலையோடு யோசித்தார்கள். அப்போது உங்களைப் போன்ற இரண்டு பசங்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் எழுந்து நின்று பெரியவர்களைப் பார்த்து “நாங்கள் ஒரு யோசனை சொல்ல விரும்புகிறோம்,” என்று கேட்டார்கள். சின்னப் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று ஒதுக்கிவிடாமல் அவர்களுடைய யோசனையைச் சொல்வதற்குப் பெரியவர்கள் ஊக்குவித்தார்கள்.

“நாம் ஏதாவது சாப்பிட்டால் தண்ணீர் குடிப்போம். ஆனால் அந்த விலங்கு எல்லாவற்றையும் சாப்பிடுகிறது, தண்ணீர் இருக்கிற பக்கம் போகவே இல்லை. தண்ணீரைப் பார்த்து அது பயப்படுகிறது என்று தெரிகிறது. ஆகவே நாம் அதற்குச் சாப்பாடு வைக்காமல் தண்ணீர் மட்டும் ஊற்றிப் பார்க்கலாமே,” என்று சிறார் இருவரும் சொன்னார்கள். பெரியவர்கள் அதே போல் செய்ய விலங்கு ஓடியே போனது. இப்போது உங்களுக்கு என்னுடைய கேள்வி என்னவென்றால், அது என்ன விலங்கு?

விடை: யாரிடமும் கேட்காமல் அவர்களாக யோசித்து, நெருப்புதான் அந்த விலாங்கு என்று சரியாகக் கண்டுபிடித்த கண்மணிகளுக்கு பாலர் பூங்கா வாழ்த்துகள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.