முந்தய பக்கம்

புதிர்  விளையாட்டு

17 Jan 2026, 2:42 pm
                   புதிர்  விளையாட்டு
<p><strong>புதிர் &nbsp;விளையாட்டு </strong></p> <p>மஞ்சு போன வாரம் நம் பூங்காவில் உட்கார்ந்து, ஐந்து குட்டிப் புதிர்களுக்கு விடை கண்டு பிடித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. &nbsp;அதனால் இன்றைக்கும் அதே போல துளிப் &nbsp;புதிர்களைப் பார்ப்போம். விடையை முன்கூட்டியே &nbsp;பார்க்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். எதுன்னு சொல்லுங்க! அதை திரும்பத் திரும்ப ஈரமாக்குறதுக்குன்னே உலர்த்துவாங்க, அது எது? அந்த நாக்குக்கு விதவிதமான உணவுப் பொருள்கள் பிடிக்கும், ஆனால் தண்ணீரைக் குடித்தால் அடங்கிவிடும், அது எது? அதிலே நிறையத் துளைகள் இருக்கும், ஆனா &nbsp;அதுக்குள்ளே தண்ணீர் நிற்கும். அது எது? அரைக் கிலோ இறகுகள், அரைக் கிலோ கற்கள் &ndash; &nbsp;இரண்டில் எது அதிகமான எடை? பறந்துக்கிட்டே இருக்கும், ஆனா இருந்த இடத்தை விட்டு நகராது. அது எது? &nbsp;விடைகள் துவாலை, &nbsp;2) தீ, &nbsp;3) ஸ்பாஞ்ச், &nbsp;4) இரண்டுமே சம எடைதான், &nbsp;5) கொடி. இந்தச் சரியான &nbsp;விடைகளை &nbsp;ஊகித்தவர்களுக்கு &nbsp;பாலர் பூங்கா பாராட்டுகள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram