புதிர் விளையாட்டு - மஞ்சு
13 Dec 2025, 1:22 pm

புதிர் விளையாட்டு - மஞ்சு

அறிவைத் தீட்டிக் கொள்வதற்கு ஒரு சோதனையாக, அதே வேளையில் அருமை யான பொழுதுபோக்காக இருப்பது புதிர் விளை யாட்டு. இன்றைய ஆட்டத்தில் கலந்துகொள்ள வாருங்கள் – ஒரே நிபந்தனை, கீழே தரப்பட்டுள்ள விடையை முதலிலேயே பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் நாமே புதிரை அவிழ்க்கும் சுகத்தை இழந்துவிடுவோம். கிழமை மர்மம்! புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதிலும், புதிர் போடுவதிலும் ஆர்வம் உள்ளவன் மெய்யழ கன், தன் நண்பர்களிடம், “யாரும் எளிதில் விடை கூற முடியாத புதிய புதிர் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன்,” என்று சொன்னான். அவர் களும் அதே ஆர்வத்துடன் அவன் சொல்வதைக் கேட்கத் தயாரானார்கள். “நாளைய கிழமைக்கு முந்தைய நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு வரும் நாளின் முதல் நாள் சனிக்கிழமை. அப்படியானால் இன்று என்ன கிழமை?” –இதுதான் அவன் கேட்ட கேள்வி. மலர்நாதன், “ஞாயிற்றுக் கிழமை,” என்றான். மல்லிகா “திங்கள் கிழமைதானே,” என்று கேட்டாள். கவிநிலா மட்டும்தான் சரியான விடையைச் சொன் னாள். அது என்ன?

விடை

“நாளைக்கு முதல் நாள் என்றால் இன்றுதான். இரண்டு நாட்களுக்குப் பிறகு வரும் கிழமைக்கு முதல் நாள் என்றால் உண்மையில் ஒரு நாளுக்குப் பிறகு வரும் நாள் என்றுதான் பொருள். ஆகவே இன்றைக்கு ஒரு நாள் கழித்து வருவது சனிக்கிழமை என்றால் அது நாளைக்கு என்று புரிந்துகொள்ளலாம். ஆகவே நாளைக்கு சனிக்கிழமை என்றால் இன்று வெள்ளிக்கிழமை.”

கவிநிலா போலவே கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள், முயற்சி செய்த எல்லோருக்கும் வாழ்த்துகள்.