முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு - மஞ்சு

27 Dec 2025, 12:15 pm
புதிர் விளையாட்டு - மஞ்சு

புதிர் விளையாட்டு

புதிர்  விளையாட்டு என்பது நல்ல புத்திக் கூர்மை விளையாட்டாகவும் இருக்கிறது அல்லவா? ஆகவேதான், நமது பாலர் பூங்காவுக்கு வருகிறவர்கள் இந்த விளையாட்டை ரசித்து விளையாடுகிறார்கள். சரி, நாமாகவே புதிரை அவிழ்க்க முயற்சி செய்துவிட்டு, நாம் கண்டுபிடித்தது சரிதானா என்று பார்ப்பதற்கு மட்டும் விடையைப் பார்ப்பது என்ற மன உறுதியோடு இந்த வாரக் கேள்விக்குத் தயாராவோம்.

எப்படி சாத்தியமாகும்?

இரு சக்கர வண்டியில் அப்பாவும் மகனும் பயணம் செய்கிறார்கள். ஒரு திருப்பத்தில் வண்டி நிலை தடுமாறி விழுந்துவிடுகிறது. இரண்டு பேருக்குமே பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது. சாலையில் இதைக் கவனித்த மக்கள் உடனே அந்த இரண்டு பேரையும் மருத்துவமனையில்  சேர்த்தார்கள். மருத்துவமனையில் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.  இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை அறைகளுக்குக் கொண்டுபோய் படுக்க வைக்கிறார்கள். மகன் இருக்கும் அறைக்கு வருகிற மருத்துவர், “என்னால் சிகிச்சை அளிக்க முடியாது, பதற்றத்திலே ஏதாவது தப்பா செஞ்சிடுவேன். ஏன்னா இவன் என்னோட மகன்,” என்று கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும்?

விடை

மருத்துவர் அந்தப் பையனின் தாய்! அப்படியானால் சாத்தியம்தானே? இதை சரியாக ஊகித்தவர்களுக்குப் பாராட்டுகள்.

Share
FacebookXWhatsAppTelegram