புதிர் விளையாட்டு
20 Dec 2025, 2:23 pm
<p><strong>புதிர் விளையாட்டு</strong></p>
<p>மோசடியைக் கண்டுபிடித்தது எப்படி? கலைச்செல்வியும் கலைச்செல்வனும் பெற்றோருடன் கலைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றார்கள். பல விதமான சிற்பங்கள், ஓவியங்கள், கோப்பைகள், அலங்கார வேலைப் பாடுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பழங்காலக் கலைப்பொருள்கள் என்று அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்த அறைக்குள் நான்கு பேரும் போனார்கள். சிம்மாசனம், மயில்வாகனம், கிரீடம், வாள், கேடயம், போர் வீரன், நடன மங்கை உள்ளிட்ட உலோகச் சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு வெண்கல விளக்கு பல நுட்பமான வளைவுகளுடன் மிக அழகாக இருந்தது. அப்பா அதை வாங்கலாமா என்று கேட்க, அம்மாவும் அது நன்றாக இருக்கி றது, வாங்கலாம் என்றார். கண்காட்சி உரிமையாளர் “நல்ல செலக்சன் சார். இதை, முதலாம் உலகப் போர் நடந்தப்ப பாதுகாப்பா ஒரு இடத்துல பதுக்கி வைச்சுட்டாங்க. சமீபத்தில்தான் இதைக் கண்டுபிடிச்சு வெளியே எடுத்தாங்க,” என்றார். “முதலாம் உலகப் போர் நடந்தப்ப இதைப் பதுக்கிட்டாங்கன்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு,” என்று அம்மா கேட்டார். “நல்ல கேள்வி. விளக்கோட அடிப்பகுதியில பாருங்க,” என்றார் உரிமையாளர். விளக்கின் அடியில், “முதலாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்டதால் இந்தக் கலை விளக்கு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது,” என்று உளி யால் செதுக்கிப் பொறிக்கப்பட்டிருந்தது. திருப்தி அடைந்தவராக அப்பா, “இதே எடுத்துக்கிடுறோம். பார்சல் பண்ணுங்க. இது எவ்வளவு விலை” என்று கேட்டார். உரிமையாளர் விலை சொல்ல வாயைத் திறந்தபோது, “இது வேணாம்ப்பா,” என்றாள் கலைச்செல்வி. ஏன் என்று அம்மா, அப்பா இரு வரும் கேட்டார்கள். “இது முதலாவது உலக யுத்தம் நடந்தப்ப பதுக்கின துக்கு இந்த எழுத்துதான் ஆதாரம்னு சொல்றதை நம்ப முடியாது” என்றாள் அவள். பெற்றோர் அவள் சொன்ன காரணத்தைக் கேட்டு வியந்தார்கள். உரிமையாளரும், “நானும் இதை என்கிட்ட வித்தவங்ககிட்ட ஏமாந்துட் டேன், தேங்க்ஸ் பாப்பா,” என்றார். அவள் இந்த உண்மையை எப்படிக் கணடுபிடித்தாள்? விடை முதலாவது யுத்தம் நடந்தபோது பதுக்கிவைத்தவர்களுக்கு இரண்டாவது யுத்தம் வரும் என்று எப்படித் தெரிந்திருக்க முடியும்? அப்போது எப்படி விளக்கின் அடியில் அவ்வாறு பொறித்திருக்க முடியும்? கலைச்செல்வி போலவே இதை சரியாக ஊகித்தவர்களுக்குப் பாராட்டுகள்.</p>
