தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புழல் சிறையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

25 May 2026, 2:27 am
புழல் சிறையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

புழல் சிறையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

சென்னை, மே 24- சென்னை புழல் சிறையில் கைதிகள் செல்போன் மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

புழல் சிறையிலுள்ள 4,000-க்கும் மேற்பட்ட கைதிகளின் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, சிறைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (மே 24) மூன்று மணி நேரம் நேரில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பார்வை யாளர்கள் மற்றும் பொருட்களைக் கடுமையான ஸ்கேனிங் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், சிறையில் நீண்டகாலமாக உள்ள கைதிகளை விடுவிக்கச் சட்ட ஆலோசனைக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு கேமரா, குடிநீர் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை மேம்படுத்துவ தற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்திற் குள் வெளியாகும் என்றும் அவர் தெரி வித்தார்.

தொடர்ந்து மின்வாரியச் செயல் பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், இரவு பகல் பாராமல் உழைக்கும் மின் ஊழியர்களைத் தேவையின்றி இட மாற்றம் செய்யக் கூடாது என்றும், அதே நேரம் உள்நோக்கத்துடனும் மெத்தன மாகவும் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் எச்சரித்தார்.

மேலும், பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடப் பணிகளை விரைந்து முடித்துத் திறக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.