புடின் - ஜி ஜின்பிங் சந்திப்பு
20 May 2026, 11:02 pm
<p><strong>புடின் - ஜி ஜின்பிங் சந்திப்பு</strong></p><p>பெய்ஜிங், மே 20 - ரஷ்யா ஜனாதிபதி புடின், அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமன்றத்தில் (Great Hall of the People) சீன ஜனாதிபதி ஜின்பிங்கைச் சந்தி த்து இரு நாட்டு உறவுகளின் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, சீன - ரஷ்ய உறவு முன்னெப்போதையும் விட அதிவேக வளர்ச்சியுடனும், பெரும் சாத னைகளுடனும் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என ஜி ஜின்பிங் குறிப்பிட்டார். இந்த ஆண்டு சீன - ரஷ்ய ஒத்துழைப்பு உறவின் 30 ஆவது ஆண்டு நிறைவையும், இரு நாடுகளுக்கு இடையி லான நட்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானதன் 25 ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனா விற்கு வந்து சென்ற ஒரு சில நாட்களி லேயே இந்த பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>
