தீக்கதிர் உலக செய்திகள்
9 Sept 2026, 8:48 pm

புடின்- டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யா தகவல்

ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யா ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் கைதிகள் பறிமாற்றம் உள்ளிட்ட விசயங்கள் ஆக்கப்பூர்வமாகவும் மிக வெளிப்படையாகவும் பேசப்பட்டது என ரஷ்யா மூத்த அதிகாரி யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யாவிற்கு எவ்விதப் பகைமைஎண்ணமும் இல்லை என்பதை புடின் அழுத்தமாகக் குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு உளவுத் தகவல் வழங்கிய அமீரகம்

2023 அக்டோபர் 7, அன்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. இம் மோதல் ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே, ஹமாஸ் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE)ஜனாதிபதி முகமது பின் சயீத் நேரடியாக எச்சரித்ததாக ‘ஹாரெட்ஸ்’ என்ற இஸ்ரேல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவின் ஹமாஸ் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் ஒரு ராணுவ நடவடிக்கைக்குதிட்டமிட்டுள்ளதாகக் முகமது பின் சயீத் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் தலையீடு சாஹெல் பிராந்தியத்தை மோசமாக்கியது

லிபியாவில் மேற்குலக நாடுகள் மேற்கொண்ட தலையீடு, ஆயுதம் ஏந்திய குழுக்கள் பிராந்தியம் முழுவதும் பரவ வழிவகுத்தது. இதன் மூலம், நைஜீரியா மற்றும் சாஹெல் பிராந்தியம்எதிர்கொள்ளும் பாதுகாப்பு நெருக்கடிகளை மேலும் மோசமாக்கியுள்ளது என்று நைஜர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் யாஹாயா அபூபக்கர் அப்துல்லாஹி தெரிவித்துள்ளார். 2011-இல் நேட்டோ லிபியா மீது தாக்குதல் நடத்தும் முன்பும் கூட தங்கள்மேற்கு ஆப்பிரிக்க நாடு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டது. அதை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் அந்தச்சூழல் நேட்டோ தாக்குதலுக்கு பிறகு மாறிவிட்டது என கூறினார்.

எரிபொருள் இறக்குமதி மீதான தடை அமெரிக்காவிற்கு கியூபா கடும் கண்டனம்

ஹவானா,செப்.9-கியூபாவின் மின் உற்பத்திக்கான எரிபொருள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுக்கு கியூபாவெளியுறவுத் துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு வழங்கும் நூறு மில்லியன் டாலர் மனிதநேய உதவிஎன்பது, கியூபாவில் இரண்டு வாரங்களுக்குக் குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தி செய்வதற்குத் தேவையான எரிபொருளின் அளவுக்குக் கூட ஈடாகாது.அமெரிக்க அரசாங்கத்தால் கியூபா மீது விதிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் எரிபொருள் தடையானது, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கானஎரிபொருள் மற்றும் டீசல் இறக்குமதியைத் தடுக்கிறது. மேலும் புதிய ஒளிமின்னழுத்தப் பூங்காக்களுக்கான (photovoltaicparks) சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகளின் இறக்குமதியையும் தடுக்கிறது.

எண்ணெய்க் கப்பல்கள் கியூபாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டால், மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த கியூபா மக்கள் மீதும் தண்டனை விதிக்கும் வகையிலான கொடூரமாக கணக்கிடப்பட்ட ஒரு திட்டம். கியூபா எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் அல்ல,இந்த பொருளாதாரத் தடைதான் அச்சுறுத்தல் என்று ரோட்ரிக்ஸ் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதார, வணிக மற்றும் நிதித் தடைகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி தனது வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக, அக்டோபர் 27 அன்று ஐ.நா பொதுச் அவையில் கியூபா அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளது.

அந்த அறிக்கையில், 2025 மார்ச் 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரையிலான காலத்தில், அமெரிக்கத் தடைகளால் தற்போதைய பணமதிப்பின் அடிப்படையில் கியூபாவிற்கு 8.08 பில்லியன் அமெரிக்க டாலர் (76,857 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை பதிவானதிலேயே இதுதான் கியூபாவிற்கு ஏற்பட்ட மிக அதிக அளவிலான இழப்பாகும்.