தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

35 ஆண்டுகள் நத்தம் புறபோக்கில் குடியிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினர்

6 Nov 2026, 12:34 am
35 ஆண்டுகள் நத்தம் புறபோக்கில் குடியிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினர்

35 ஆண்டுகள் நத்தம் புறபோக்கில் குடியிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினர்

பட்டா இல்லாமல் கடந்த 35 ஆண்டுகளாக காணை அருகே குப்பம் அரசு நத்தம் புறபோக்கில் குடியிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினர் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

விழுப்புரம், நவ.5-விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பம் ஊராட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக அரசு நத்தம் புறபோக்கில் குடியி ருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த 13 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இது குறித்து அந்த மனு வில் விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பம் ஊராட்சியில் சுமார் 35-ஆண்டுகளுக்கும் மேலாக நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பட்டியல் சமுகமான புதிரை வண்ணார் சமுகத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அனைவரும் சல வைத் தொழில் செய்து பிழைப்பு

நடத்தி வருகிறோம். எங்களுக்கு அரசின் அடையாள ஆவணங்க ளான ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை, சாதி சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் குடியிருப்பு முகவரியில் இருக்கின்றன. நாங்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சார வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் முறையாக கட்டி வரு கிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கென மனையோ, நிலமோ எதுவும் இல்லை, நாங்கள் குடியிருக்கும் இடத்தை

தவிர வேறு எந்த இடமும் எங்களுக்கு இல்லை, அத னால் 35 ஆண்டுகளுக்கு மேலாக

குடியிருக்கும் குடியிருப்புகளுக்கு மனைப்பட்டாவை வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறிள்ளதாக தெரி வித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.