தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புத்தளம் : சாலையின் வளைவில் உள்ள பனைமரத்தால் நிகழும் தொடர் விபத்துகள் மரத்தை உடனடியாக அகற்ற சிபிஎம் கோரிக்கை

16 Jun 2026, 9:22 pm
புத்தளம் : சாலையின் வளைவில் உள்ள  பனைமரத்தால் நிகழும் தொடர் விபத்துகள்  மரத்தை உடனடியாக அகற்ற சிபிஎம் கோரிக்கை

புத்தளம் : சாலையின் வளைவில் உள்ள பனைமரத்தால் நிகழும் தொடர் விபத்துகள் மரத்தை உடனடியாக அகற்ற சிபிஎம் கோரிக்கை

நாகர்கோவில், ஜூன் 16- குமரி மாவட்டம், புத்தளம் பேரூராட்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பனை மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சிபிஎம் சார்பில் கோட்டாட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஎம் ராஜாக்க மங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ற்றி.ராஜகுமார் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: புத்தளம் பேரூ ராட்சி- பணிக்கன் குடியிருப்பு சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருந்து வரும் பனை மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

இராஜாக்கமங்கலம் ஒன்றி யம், புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட பணிக்கன் குடியிருப்பு-தெங்கம் புதூர் உள்ளூர் சாலையில் கோவி லின் தெற்கு பகுதியில் ஒரு பனை மரம் உள்ளது. சாலையின் வளைவு பகுதியில் இந்த பனை மரம் உள்ள தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் மரம் இருப்பது தெரி யாமல் வாகனம் ஓட்டிவரும் நபர்கள் மரத்தில் மோதும் நிலை உள்ளது .இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இரண்டு நபர்களின் கால்கள் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள துயரச்சம்பவம் நிகழ்ந்துள் ளது.

தொடர்ந்து இது போன்று நடை பெறும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடை யூறாக உள்ள பனை மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்ச னையில் தலையீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பனைமரத்தை அப்புறப்படுத்தி விபத்துகளில் இருந்து பொது மக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.