தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கிரீடத்தைக் கீழே போடு, கோமாளியே’ டிரம்ப்புக்கு எதிராக பேரெழுச்சி

29 Mar 2026, 3:34 pm
‘கிரீடத்தைக் கீழே போடு, கோமாளியே’ டிரம்ப்புக்கு எதிராக பேரெழுச்சி
<p><strong>&lsquo;கிரீடத்தைக் கீழே போடு, கோமாளியே&rsquo; டிரம்ப்புக்கு எதிராக பேரெழுச்சி</strong></p> <p>வாஷிங்டன், மார்ச் 29 - ஈரான் மீதான ராணுவ நட வடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வின் வீதிகளில் லட்சக்கணக் கான மக்கள் திரண்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். &nbsp;&lsquo;நோ கிங்ஸ்&rsquo; (மன்னர்கள் &nbsp;வேண்டாம்) என்ற பெயரில் &nbsp;நடைபெற்ற இந்தப் போராட்டங் களின் மையப்புள்ளியாக அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் திகழ்ந்தது. செயின்ட் பால் நகரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு, அமெரிக்கக் கொடியைத் தலை கீழாகப் பிடித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். &lsquo;கிரீடத்தைக் கீழே போடு, கோமாளியே&rsquo;, &lsquo;ஆட்சி மாற்றம் நம் நாட்டிலிருந்தே தொடங் கட்டும்&rsquo; போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி &nbsp;மக்கள் ஆக்ரோஷமாக முழக்க மிட்டனர். &nbsp;90 லட்சம் பேர் பங்கேற்பு &nbsp;சிகாகோ, மியாமி, அட்லா ண்டா, சான் டியாகோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம் வன்முறையாக மாறிய நிலை யில், காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிக் கூட்டத்தைக் கலைத்த னர். அமெரிக்காவின் 50 மாகா ணங்களில் 3,100-க்கும் மேற் பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் மொத்தம் சுமார் 90 லட்சம் மக்கள் பங்கேற்றதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. &nbsp;ஐரோப்பாவிலும் எதிர்ப்பு &nbsp;இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப் பிய நாடுகளிலும் டொனால்டு &nbsp;டிரம்ப்பிற்கு எதிராகப் போரா ட்டங்கள் வெடித்தன. இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெ லோனிக்கு எதிராகவும் அங்கு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனிடையே, இந்தப் போரா ட்டங்கள் &lsquo;இடதுசாரி நிதி அமைப்பு களின் தயாரிப்பு&rsquo; என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் குற்றம் சாட்டிக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.