முந்தய பக்கம்

புரிசையில் நாடகக் கலை விழா

10 Oct 2026, 2:09 am
புரிசையில் நாடகக் கலை விழா
<p><strong>புரிசையில் நாடகக் கலை விழா</strong></p><p>திருவண்ணாமலை, அக்.9-திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புரிசை துரைசாமி கண்ணப்பத்தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் சார்பில் கலைமாமணி கண்ணப்பத்தம்பிரான் நினைவு நாடகக் கலை விழா மற்றும் கலைமாமணி கண்ணப்பத்தம்பிரான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவிழா புரிசை கிராமத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு பத்மஸ்ரீ கலைமாமணி பி.கே.சம்பந்தன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பாடி கிராமம் கலைமாமணி முனுசாமிக்கு தமிழ்நாடு அரசு ஆணையரகம் கலை மற்றும் பண்பாட்டு துணை இயக்குனர் (திட்டங்கள்) ஹேமநாதன் வாழ்நாள் சாதனை விருது வழங்கினார். தொடர்ந்து செய்யூர் தோள்கட்டை இருளர் கலைக்குழு பழங்குடியினர் இசையும் , தூத்துக்குடி பண்பாட்டு வெளி வெக்கை கலை இலக்கிய குழுவின் தனிநபர் நாடகமும், பொள்ளாச்சி ஸ்டார் சிக்கட்ட கலைக்குழு சார்பில் ஜிக்காட்டமும் அதனைத் தொடர்ந்து மும்பை ளிப்பில்லி ப்ரொடக்‌ஷன் சார்பில் லாவண்யாவதி நாடகமும் நடந்தது. தொடர்ந்து விழுப்புரம் கம்பம் குழு மன்னன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் மல்லர் நாடகமும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் சார்பில் முன்னடியோர் நாடகமும் குறிசை கண்ணப்ப தம்பிதான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் சார்பில் 18 ஆம் போர் நாடகமும் நடந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram