பழங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது புறாவிளையில் உயர் அழுத்த மின்மாற்றியை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ, ஆட்சியர் இயக்கி வைத்தனர்
6 Oct 2026, 8:51 pm

பழங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது புறாவிளையில் உயர் அழுத்த மின்மாற்றியை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ, ஆட்சியர் இயக்கி வைத்தனர்

நாகர்கோவில், அக். 6-கன்னியாகுமரி மாவட்டம் புறாவிளை மலை பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேறியது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி , மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் உயர் அழுத்த மின்மாற்றியை அக்டோ

பர் 6 செவ்வாயன்று இயக்கி வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சியில் உள்ளது புறாவிளை மலைக்கிராமம். குறைந்த மின் அழுத்தம் காரணமாக தெருவிளக்குகூட எரியாத நிலையில் வன விலங்குகளால் அச்சத்துடன் மக்கள் வாழ்ந்தனர். அரசுவழங்கிய மின் சாதனங்களைக்கூட பயன்படுத்த முடியாத நிலைநீடித்தது. இதனால் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் தொலைபேசி கோபுரம் சோலார் மின்சாரத்தில் தொலைத்தொடர்பு வசதியை வழங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புறாவிளைமக்களின் துயரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று ஆர்.செல்லசுவாமி வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியின்படி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி புறாவிளை பழங்குடி மக்களின் துயரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதன் பயனாக, ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 63 கேவிஏ ( KVA) திறன் கொண்ட உயர் மின்அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட் டது. அதனை மாவட்ட ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் துவக்கி வைத்தனர். இதில் சார் ஆட்சியர் டி.மாலதி, மாவட்ட வன அலுவலர் அன்பு, மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் விஸ்வம்பரன், தோட்டத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் வேலப்பன், , சிபிஎம் வட்டாரக் குழு உறுப்பினர் என்.ஷாஜூ, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றியப் பொறுப்பாளர் நாகப்பன், சிபிஎம் மணலோடை கிளைச் செயலாளர் ஜெஸ்டின், மலைவாழ் மக்கள் கிளைச் செயலாளர் ஸ்ரீரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.