முந்தய பக்கம்

பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் காலமானார்

23 May 2026, 9:48 pm
பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் காலமானார்

பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் காலமானார்

சென்னை, மே 23 - தலை சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் எழுத்தாளருமான கலைவாணன் முத்துக்கூத்தன் மே 22 அன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

45 ஆண்டுகளுக்கும் மேலாக பொம்மலாட்டக் கலையை கையில் எடுத்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வந்த அவர், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

திரைப்பட பாடலாசிரியரும் திராவிட இயக்கத்தின் முன்னணி குரலுமான முத்துக்கூத்தனின் மகனான கலைவாணன், தந்தையின் வழிநின்று கடந்த 45 ஆண்டுகளாக பொம்மலாட்டக் கலை மூலமும், வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி மூலமும், நாடகங்கள் மூலமும் திராவிட இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஓயாது உழைத்தவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் மற்றும் இலக்கிய வீதி அமைப்புடன் இணைந்து பயணித்த கலைமாமணி மு.கலைவாணனின் மறைவு கலை உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.

மே 23 அன்று மாலை 5:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் செல்லியம்மன் கோவில் தெரு கூத்தர் குடிலில் இருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கலைஞர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram