தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

25 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வருவோரை காலி செய்வதா? சாலையோர வியாபாரிகள் தவிப்பு!

10 Oct 2026, 3:03 am
25 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வருவோரை காலி செய்வதா? சாலையோர வியாபாரிகள் தவிப்பு!

25 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வருவோரை காலி செய்வதா? சாலையோர வியாபாரிகள் தவிப்பு!

ஈரோடு, அக்.9-புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர வியாபாரம் செய்து வசித்துவருவோரை அகற்ற நகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் சாலையோர வியாபாரிகள் 15 பேர்கடை அமைத்து வாழ்க்கை நடத்திவருகின்றனர். அவர்களை புதனன்று திடீரென காலி செய்யுமாறுநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியபோது, ‘1994 இல் கடை வைத்தேன். இப்பகுதியில் பேக், படுதா உள்ளிட்டவை தைத்துவருகிறேன். ’30 வருட அனுபவம்உள்ளது. திடீரென இக்கடையை காலி செய்ய வேண்டும் என்கின்றனர். எங்கே செல்வது எனத் தெரியவில்லை. இதன் பாதிப்பை அவர்கள் உணரவில்லை என்கிறார்’, தையல் தொழிலாளி. ‘20 வருடமாகதுணிக்கடைவைத்து நடத்தி வருகிறோம். சுங்கமாக ரூ.40 நகராட்சியினர் வாங்கி வந்தனர். இப்போது இல்லை. யாருக்கும் எந்த இடஞ்சலும் இல்லாமல் தான் வியாபாரம் செய்து வருகிறோம். இதன் மூலம்நாளொன்று ரூ.300, ரூ.400 கிடைக்கும். இப்போது பொறியாளர் திடீரென கடையை காலி செய் என்றால்,வாழ்வாதாரம் பாதிக்கும்’ என துணிக்கடைக்காரர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி நகராட்சி ஆணையாளரை தொடர்பு கொண்ட போது, பேசவில்லை. நகரத்தின் ஓரத்தில் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் போடுங்கள் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து சிஐடியு தரப்பில் பேசிய செந்தில், ஆணையாளர் மற்றும் பொறியாளரை நேரில்சந்திக்கசென்றும், அவர்கள் எங்களிடம் பேச தயாராக இல்லை. மீட்டிங்கில்இருப்பதாக கூறினர். நேரில்சந்தித்து பேசி தீர்வு காணலாம். அதுவரை கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்குமுன் அப்பகுதியில் சில இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும், அதில் 3 கடைகள் பாதிக்கப்பட்டும் உள்ளது. அதை சரி செய்ய வழியில்லாமல், அப்படியே ஒருவர் வேலை செய்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.