தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி பஞ்சாப் துப்புரவுத் தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம்

8 Oct 2026, 9:35 pm
தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி பஞ்சாப் துப்புரவுத் தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம்

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி பஞ்சாப் துப்புரவுத் தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம்

வேலைநிறுத்தம் 69

“நாளெல்லாம் நகரைத் தூய்மைப்படுத்தும் எங்களின் உழைப்புக்குரிய நிரந்தர வேலையையும், சம ஊதியத்தையும் வழங்கமறுப்பது எந்த வகையில் நியாயம்?எங்களின் அடிப்படை உரிமை களுக்காகப் போராடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!” — பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில், துப்புரவுத் தொழிலாளர்கள் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடியையும் மீறித் தங்களின் வர்க்கக் குரலை ஆவேசமாகஎழுப்பியுள்ளனர்.

பஞ்சாப்பில் துப்புரவுத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், பர்னாலாவில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறைத்தடியடி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) அறிக்கை கோரியுள்ளது இப்போராட்டத்திற்கு மேலும் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

பர்னாலா தடியடியும் மனித உரிமைகள் ஆணையத்தின் நடவடிக்கையும்

ஜூலை 25 அன்று பர்னாலாவில் உள்ள எஸ்டி கல்லூரி மற்றும் ஹண்டியாபஜார் அருகில், தங்களது வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயன்ற வெளி ஆட்கள் மற்றும் இயந்திரங்களின்பயன்பாட்டை எதிர்த்துத் துப்புரவுத் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களைக் கலைக்கமுயன்ற காவல்துறையினர், பெண் தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் என்றும் பாராமல் கடுமையான தடியடிநடத்தினார்கள். இதில் பல தொழி லாளர்கள் படுகாயமடைந்தனர்.இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள்ஆணை யம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைஇயக்குநர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றுஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், பொதுமக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கபர்னாலா துணை காவல் கண்காணிப்பா ளர் சத்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், ஒரு அதிகாரியை மட்டும் தற்காலிகமாக நீக்குவது முழுமையான நீதி ஆகாது என்று தொழிலாளர்அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜூலை 8 முதல் தொடரும் வேலைநிறுத்தம்

பஞ்சாப் முழுவதும் துப்புரவுத் தொழிலாளர்கள் கடந்த ஜூலை 8 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த மற்றும் வெளிமுகமை (Outsourced) பணியாளர்களை நிரந்தரம் செய்தல், சம வேலைக்குச் சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்குதல் மற்றும் நகராட்சி சேவைகளில் தனியார்மயமாக்கலை முற்றிலுமாக ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.

இந்தத் தொடர் வேலைநிறுத்தத் தினால் பல நகரங்களில் குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் அவசர காலச் சட்டங்களைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முயன்றாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக நிர்வாகம்அடக்குமுறைகளைக் கையாள்வதாகத் தொழிற்சங்கங்கள்குற்றம்சாட்டியுள் ளன. மேலும், இச்சமூகப்பிரச்சினைதொடர்பான வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், மாற்றுநடவடிக்கைகளைத் தொடர உத்தரவிட்டுள்ளது.

மின்சாரத் துறை ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் வேலையற்றஇளைஞர்களின் தொடர் போராட்டங்களுடன் இணைந்து துப்புரவுத் தொழி லாளர்களின் இந்தப் போராட்டமும் பஞ்சாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப் பான வேலைவாய்ப்பு, கண்ணியமானபணிச்சூழல் மற்றும் சமூக நீதிக்கான இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த வர்க்க ஒருமைப்பாட்டின் அடையாளமாகவலுப்பெற்று வருகிறது.தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.