பஞ்சாப்பில் கோர விபத்து 9 பேர் பலி ; 6 பேர் படுகாயம்
6 Jun 2026, 9:21 pm
<p><strong>பஞ்சாப்பில் கோர விபத்து 9 பேர் பலி ; 6 பேர் படுகாயம் </strong></p><p>பஞ்சாப் மாநிலம் ஜலாலா பாத்திலிருந்து இறந்த உற வினரின் அஸ்தியை கரைப்ப தற்காக பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் மினி வேனில் பியாஸ் நதி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். பெரோஸ்பூரின் ஜங்கா வாலா மோர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த மினி வேன், எதிர்திசையில் வந்த லாரி யுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காய மடைந்த 15 பேர் பெரோஸ்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுதொடர்பாக பெரோஸ்பூர் அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் நிகில் குப்தா கூறுகையில்,“ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பலர் (6 பேர்) மேல் சிகிச்சைக்காக பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள் ளனர். லேசான காயம் அடைந்தவர்க ளுக்கு அரசு பொது மருத்துவமனை யிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.</p>
