பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோராவை கைது செய்த அமலாக்கத்துறை
9 May 2026, 9:39 pm
<p><strong>பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோராவை கைது செய்த அமலாக்கத்துறை</strong></p><p>சண்டிகர் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அங்கு ஆட்சிக் கட்டிலில் அமர பாஜக தீவிரமாக இறங்கி யுள்ளது. இதன் தொடக்க வேலை யாக பஞ்சாப் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.,க்களை பாஜக தங்கள் பக்கம் வளைத்துள்ளது. 7 பேரும் பாஜகவின் அங்கமாக மாறிவிட்டனர். இந்நிலையில், பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் தலைமை யிலான அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருக்கும் சஞ்சீவ் அரோராவை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சனியன்று கைது செய்தது. சண்டிகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நீண்ட சோதனைக்குப் பின் சஞ்சீவ் அரோரா கைது செய்யப் பட்டுள்ளார். பாஜகவின் தூண்டுதலால் தான் பஞ்சாப் அமைச்சர் கைது செய்யப் பட்டார் என நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிகின்றன. எச்சரிக்கை அமைச்சர் கைது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறுகையில்,“பஞ்சாப் என்பது குருமார்கள் வாழ்ந்த பூமி; ஔரங்க சீப்புக்கே பணியாத மண்; ஆங்கிலேய ருக்குப் பணியாத பகத் சிங்கின் நிலம். இதுபோன்ற அரசியல் தந்திரங்க ளுக்குப் பஞ்சாப் ஒருபோதும் பணி யாது. அமலாக்கத்துறைக்கும் பாஜக வுக்கும் இடையிலான அறமற்ற கூட்டணியின் முடிவு பஞ்சாபிலிருந்து தொடங்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
