தீக்கதிர் முக்கிய செய்திகள்
25 Dec 2025, 4:24 pm

பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா

பாஜக எல்லாவற்றையும் அழிக்கவே துடிக்கிறது. தற்போது ஆரவல்லி மலைத்தொடரை பாஜக அழிக்க விரும்புகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. பல நூற்றாண்டுகள் பழமையான ஆரவல்லி மலைகளைக் காப்பது மிகவும் முக்கியமானது. ஆரவல்லி மலைகளை காக்க நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்.

மேற்குவங்க அமைச்சர் சாஷி பஞ்சா

மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதையும், ஒருவருக்கொருவர் பிணைப்புடன் இருக்கிறார்கள் என்பதை பாஜக உணர வேண்டும். சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருப்பதால் பாஜகவின் மிதுன் சக்ரவர்த்தி வெறுப்புப் பேச்சுகளுடன் மாநிலத்தைச் சுற்றி வருகிறார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் மறைந்துவிடுவார்.

காங்கிரஸ் எம்.பி., பிரணிதி ஷிண்டே

பாஜகவின் எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குல்தீப் செங்கர், பிரிஜ்பூஷன் சிங் என பாஜவினர் எப்போதும் பெண்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். காரணம் ஆர்எஸ்எஸ்-ஸின் கொள்கைகள் பெண்களுக்கு எதிரானவை. அதைத்தான் பாஜக பின்பற்றுகிறது.

தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்

உத்தரப்பிரதேச அரசும், ஒன்றிய அரசும் குல்தீப் சிங் செங்கருக்குப் பின்னால் நிற்கின்றன. கொலைக் குற்றவாளிகளுக்கும், பாலியல் குற்றவாளிக்கும் அரசாங்கம் வெளிப்படையாக ஆதரவு அளிப்பது மிகவும் வெட்கக்கேடானது.