முந்தய பக்கம்

மாணவி பாலியல் வன்கொடுமை பல்கலைக்கழகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

27 Sept 2026, 9:58 pm
மாணவி பாலியல் வன்கொடுமை பல்கலைக்கழகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

மாணவி பாலியல் வன்கொடுமை பல்கலைக்கழகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் - பக் வாரா நெடுஞ்சாலையில் உள்ளது ‘லவ்லி ப்ரொபெஷனல் பல்கலைக் கழகம்’. இது தனியாருக்குச் சொந்தமானது.இந்நிலையில், இந்தக் கல்வி நிறுவனத்தில் சனியன்று மாலை மாணவி ஒருவர், வளாகத்திற்குள் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்றும், அதன் பின் அந்த மாணவி தற் கொலை செய்துகொண்டார்.

இந்த செய்தி மாணவர்களிடையே தீயாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவில் திரண்டனர். ஆத்திரமடைந்த அவர்கள் வளாகத்திலிருந்த கண்ணாடிகளையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். பூந்தொட்டிகளை உடைத்தெறிந்ததுடன், வளாகத்தின் சில பகுதிகளுக்கும் தீவைத்தனர்.

முதலில் “நீதி வேண்டும்” எனக் கோஷம் எழுப்பி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பின்னர் அது வன்முறையாக வெடித்தது. அதுமட்டுமன்றி, ஜலந்தர் - பக்வாரா தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கும் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. (குறிப்பு: மாணவி தற்கொலை தொடர்பாக இன் னும் விசாரணை அறிக்கை வரவில்லை)

Share
FacebookXWhatsAppTelegram