பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் : ஆம் ஆத்மி அபாரம்
30 May 2026, 9:02 pm
<p><strong>பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் : ஆம் ஆத்மி அபாரம்</strong></p><p>சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 8 மாநக ராட்சிகள், 75 நகராட்சிகள், 20 நகர பஞ்சாயத்துகளுக்கான உள்ளா ட்சித் தேர்தல் மே 26ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளியன்று முதல் எண்ணப்பட்டு வரு கின்றன. சனியன்று மாலை பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் படி, மொத்தமுள்ள 1,977 வார்டுகளில் ஆளும் ஆம் ஆத்மி 954 இடங்களையும், காங்கிரஸ் 390 இடங்களையும், சுயேச்சைகள் 251 இடங்க ளையும், சிரோமணி அகாலி தளம் 191 இடங்க ளையும், பாஜக 170 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களையும் வென்றுள் ளன. சனியன்று மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவு பெறாத தால் எந்த கட்சிக்கு எத்தனை மாநகராட்சி கள், நகராட்சிகள் உள்ளிட்ட விபரங்கள் வெளி யாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
