பஞ்சாபில் எறிகுண்டு தாக்குதல்
6 May 2026, 8:46 pm

பஞ்சாபில் எறிகுண்டு தாக்குதல்

பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் எல்லை பாதுகாப்பு படை சதுக்கம் பகுதி அருகே ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து காவல்துறை, தீயணைப்பு அதிகாரி கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

காவல்துறை நடத்திய விசாரணை யில் எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது. இத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தா னை சேர்ந்த பாபர் கல்சா அமைப்பு உள் ளிட்ட குழுவினர் அல்லது தடை செய்யப் பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.

பஞ்சாப்பில் ஜலந்தர் உள்ளிட்ட பெரிய நகரங்கள், எல்லைப்புற மாவட் டங்களில் 2024 முதல் காவல் துறை அலுவலகங்களை குறிவைத்து 20-க்கும் மேற்பட்ட எறிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. அவை தொடர்பாக சில கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.