தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூடுதல் கல்விக் கட்டணத்தை திருப்பித் தர தனியார் பள்ளிகளுக்கு பஞ்சாப் அரசு உத்தரவு

5 Jun 2026, 9:12 pm
கூடுதல் கல்விக் கட்டணத்தை திருப்பித் தர தனியார் பள்ளிகளுக்கு பஞ்சாப் அரசு உத்தரவு

கூடுதல் கல்விக் கட்டணத்தை திருப்பித் தர தனியார் பள்ளிகளுக்கு பஞ்சாப் அரசு உத்தரவு

புதுதில்லி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சராக பகவந்த் மான் உள்ளார். பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு, தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வுகளுக்கு எதிராக கடும் நிபந்த னைகளை விதித்து புதிய அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

அதன்படி முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாகக் கட்டணத்தை உயர்த்திய பள்ளிகள், அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் வசூலித்த கூடுதல் தொகையைத் திருப்பி வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு களில் ஒரு பள்ளி தனது கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியிருந்தால், மாணவர் களிடமிருந்து வசூலித்த கட்டணத்தில் 35 சதவீதத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கல்விக் கட்டணம், நூலகக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம், பிற கட்டணங்கள் உட்பட பள்ளிகளால் விதிக்கப்படும் அனைத்துக் கட்டணங்களுக்கும் இந்த உச்சவரம்பு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகை யில், “தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த நாட்டின் முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது.

நிதி ஆயோக் சமீபத்தில் நடத்திய மதிப்பீட்டில் கேரளத்தைப் பின்னுக்குத் தள்ளி, பள்ளிக் கல்வித் தரவரிசையில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது” என்று அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.