தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வினாத்தாள் கசிவுக்கு எதிராகபஞ்சாப் சட்டமன்றம் கண்டன தீர்மானம்

yesterday
வினாத்தாள் கசிவுக்கு எதிராகபஞ்சாப் சட்டமன்றம் கண்டன தீர்மானம்

வினாத்தாள் கசிவுக்கு எதிராகபஞ்சாப் சட்டமன்றம் கண்டன தீர்மானம்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பகவந்த் மான் உள்ளார்.இந்நிலையில், ஜென் ஸி தலைமுறைக்கு உறுதுணையாக நிற்பதை வெளிப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் அடிக்கடி வினாத்தாள்கள் கசிவதுகுறித்து பஞ்சாப் சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானம் மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்த பின் திங்களன்று இரவு ஊடகங்களிடம் பேசியமுதலமைச்சர் பகவந்த் மான்,”பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கீழ் தொடர் வினாத்தாள் கசிவுகள் கோடிக்கணக்கான மாணவர்களின்லட்சியங்களைச் சிதைத்துள்ளது. இதற்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக நீதி கேட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் காவல்துறை அடாவடிகள் ஏவப்பட்டுள்ளது. இந்த கண்டனத் தீர்மானத்தை பிரதமர் அலுவலகம், ஒன்றிய கல்விஅமைச்சகம் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு பஞ்சாப் மாநில அரசு அனுப்பி வைக்கும். வினாத்தாள்கள் கசிவதைத் தடுத்து நாட்டின் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்”என அவர் கூறினார்.

93 வினாத்தாள் கசிவுகள்

முன்னதாக, அவை விவாதத்தின் போது முதலமைச்சர் பகவந்த் மான் பேசுகையில்,“நாட்டை விஸ்வகுருவாக்கப் போவதாகக் கூறிக்கொள்பவர்கள், நாடு முழுவதும் அடிக்கடி வினாத்தாள் கசிவதைத் தடுத்து நிறுத்தத் தவறி கல்வி அமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளனர். வினாத்தாள் கசிவுகள் அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தேர்வுத் தாள்களை விற்பது என்பது தேர்வர்களின் கனவுகளைத் தகர்க்கிறது. நீட் தேர்வில் பங்கேற்ற 22தேர்வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்,நாட்டில் 93 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன” என அவர் குற்றம்சாட்டினார்.

இந்த தீர்மானம் மீதான விவாதத்தின் போது மாநிலத்தின் முக்கியஎதிர்க்கட்சியான காங்கிரஸ் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.