தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

25 வங்கிக் கணக்குகள், 27 போலி நிறுவனங்கள் பஞ்சாப்பில் ரூ.3,000 கோடி மெகா மோசடி அம்பலம்

21 Jun 2026, 9:10 pm
25 வங்கிக் கணக்குகள், 27 போலி நிறுவனங்கள் பஞ்சாப்பில்  ரூ.3,000 கோடி மெகா மோசடி அம்பலம்

25 வங்கிக் கணக்குகள், 27 போலி நிறுவனங்கள் பஞ்சாப்பில் ரூ.3,000 கோடி மெகா மோசடி அம்பலம்

பஞ்சாப் மாநிலம் மண்டி கோபிந்த் கர் பகுதியைச் சேர்ந்த அமித் குமார் கோயல். இவர் தன் சகோதரர் மற்றும் 3 கூட்டாளிகளுடன் சேர்ந்து 2018 முதல் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் ஒரே செல்போன் எண்கள் மற் றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன் படுத்தி 27 போலி நிறுவனங்களை உரு வாக்கியுள்ளனர். எவ்வித சரக்கு பரிமாற்ற மும் இல்லாமல் வெறும் காகித அளவில் மட்டுமே ரூ.720.97 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகக் கணக்கு காட்டியுள்ளனர்.

இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய ரூ.108.49 கோடி உள்ளீட்டு வரிச் சலுகை யை சட்டவிரோதமாகப் பெற்று ஏமாற்றி யுள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சூரஜ் குமார் யாதவ் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பஞ்சாப காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தின. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி யுள்ளன.

அமித் குமார் கோயல் கும்பல் 25 வெவ் வேறு வங்கிக் கணக்குகளைப் பயன் படுத்தி மொத்தம் ரூ.3,089.57 கோடி பண த்தை வங்கிகளில் இருந்து எடுத்து முறை கேடு செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்க ளிடம் இருந்து போலிப் பில்கள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களது கமிஷனைப் பிடித்தம் செய்துவிட்டு மீதிப் பணத்தை ரொக்கமாகத் திருப்பிக் கொடுத்துள்ளனர். இதன் கணக்கு விப ரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இத்தகைய சூழலில், பஞ்சாப் முழு வதும் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 54 செக் புத்தகங்கள், 46 ஏடிஎம் கார்டுகள், 11 பான் கார்டுகள், லேப் டாப் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. ஆனால் பணம் கைபற்றப்பட் டது தொடர்பாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை. இந்த மெகா ஜிஎஸ்டி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரி மாற்றம் குறித்து அமலாக்கத்துறை தொட ர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.