புனல்வேலி கிராமத்தில் 19-வது நாளாக கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்
29 Sept 2026, 9:05 pm
<p><strong>புனல்வேலி கிராமத்தில் 19-வது நாளாக கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்</strong></p><p>இராஜபாளையம், செப்.29-இராஜபாளையம் வட்டம் புனல்வேலி கிராமத்தில் நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, 19-வது நாளான செவ்வாய்க்கிழமை எஸ்.பி.எஸ்.பி.எல். 29 நெசவாளர் கூட்டுறவு சங்கம் முன்பு கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது.பின்னர், சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்தார்.சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், இராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், நகரக் குழு உறுப்பினர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
