புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
2 Nov 2026, 10:41 pm

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

சின்னாளப்பட்டி, நவ.2-திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும்பாறை அருகே அமைந்துள்ள புல்லாவெளி நீர் வீழ்ச்சியில், தொடர் மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

பெரும்பாறை, கானல்காடு, நேர்மலை, தடியன் குடிசை, கல்லக்கிணறு, பெரியூர், பாச்சலூர், குப்பமாள் பட்டி,கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கு பெருக்கெடுத்து ஓடும்தண்ணீர் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்குச் செல்கிறது. அணையிலும் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கார், வேன், ஜீப், இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர்.இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையும், நீர்வரத்து அதிகமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் சிலர் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.