முந்தய பக்கம்

பழவேற்காட்டில் ஆட்டோ சங்கக் கிளை உதயம்

4 Jun 2026, 1:11 am
பழவேற்காட்டில்  ஆட்டோ சங்கக் கிளை உதயம்
<p><strong>பழவேற்காட்டில் ஆட்டோ சங்கக் கிளை உதயம்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 3- பழவேற்காடு பஜாரில் புதனன்று (ஜூன் 3) புதிய ஆட்டோ சங்கக் கிளை துவங்கப்பட்டது. இத்தொடக்க விழாவிற்குப் புதிய கிளைத் தலைவர் என். அசோக் குமார் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் ரகுமான், சர்புதீன், அருண்பாண்டியன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. விநாயகமூர்த்தி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தகவல் பலகையை மீன் பிடி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி. நித்தியானந்தம் திறந்து வைத்தார். இவ்விழாவில் ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர் எஸ். சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேவநேஷம், சம்பத் மற்றும் பழவேற்காடு நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வு கிளையின் தலைவராக அசோக்குமார், செயலாளராக எஸ். சுரேஷ், பொருளாளராக என். அருண்பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram