கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
5 Dec 2025, 4:21 pm

காலமானார்

ஈரோடு, டிச.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட் டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி உள்ளிட்ட பொறுப்பு களை வகித்தவர் எஸ்.முத்துசாமி. இவரது தாயார் அத்தாயம்மாள் (102), சத்தியமங்கலம், வடக்குப் பேட்டையில் உள்ள இவரது வீட்டில் வெள்ளியன்று காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதி நிகழ்ச்சிகள் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், குடும் பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஜிடி மேம்பாலத்தில் 44 கேமராக்கள் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்

கோவை, டிச.5– கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், போக்கு வரத்து பாதுகாப்பை உறுதி செய்ய, ரூபாய் 3 கோடி செலவில் 44 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன. கோல்ட் வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,790 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஜிடி மேம் பாலம், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே கோல்ட் வின்ஸ் இறங்கு தளத்தில் அதிவேக கார் ஒன்று லாரி மீது மோதி மூன்று பேர் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள், வேகத்தடுப்பு அமைப்புகள் கோரப்பட் டன. இதையொட்டி, மேம்பாலத்தில் வேகத்தடுப்பு கள், வழிகாட்டி தகவல் பலகைகள் அமைக்கப்பட் டன. இந்நிலையில், இரவிலும் அதிவேக வாகனங் களை பதிவு செய்யும் ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இவை புகைப்படத்துடன் வாகன உரிமை யாளர்களின் செல்போனுக்கு தகவல் அனுப்பி, அபரா தம் விதிக்கும். மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கள் கூறுகையில், “44 கேமராக்கள் மேம்பாலத்தின் பல் வேறு இடங்களில் பொருத்தப்படும். மேலும், 17 இடங் களில் டிஜிட்டல் டி.வி. திரைகள் வைக்கப்படும். ஒப் பந்தப் பணிகள் சில நாட்களில் முடிவடைந்து, விரை வில் பணிகள் தொடங்கும். இதன் மூலம் விதிமீறு பவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகுவர்” என்ற னர். கூடுதலாக, மேம்பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள வழிகாட்டி பலகைகளில் கிலோமீட்டர் விவ ரங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. இப்போது புதிய பலகைகளுடன் கிலோ மீட்டர் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி கள் போக்குவரத்து பாதுகாப்பை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் புகார்

கோவை, டிச.5- சூலூர் அருகே உள்ள கள்ளபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்க ளின் மீது கால் புணர்ச்சியுடன் தாக்குவது இழிவாக பேசுவது என தொடர்ச்சியாக நடந்து கொள்வதாக எஸ்பி அலுவலகத்தில் மாணவிகள் புகார் அளித்த னர். அந்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, தலை மையாசிரியர் எப்பொழுதும் பள்ளி வளாகத்தில் மாண வர்களுக்கிடையே சாதி பாகுபாடு பார்ப்பதும், மாண வர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதும் அடிப்ப தும் வாடிக்கையாக, கொண்டுள்ளார். இந்நிலையில், வியாழனன்று பள்ளி இடைவெளி நேரத்தில் கழிவ றைக்கு சென்றோம். பழுதடைந்த சுகாதாரமற்ற கழிப் பறையால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறிப் பிட்ட நேரத்தில் சென்றுவர போதிய வசதி இல்லை. இத னால் ஐந்து நிமிடம் காலதாமதம் ஆகிவிட்டது. கழி வறை சென்று வர ஐந்து நிமிடம் தாமதமானதாக கூறி தலைமை ஆசிரியர் சக மாணவர்கள் முன்பு அடித்தும் துன்புறுத்தியும் சாதிய பெயரை சொல்லி இழிவுப்படுத்தியும் பேசினார். பிற மாணவர்களுடன் பேசும் போது அந்த மாணவர்களிடம் “ஏய் நீ என்ன ஆளுங்க, இவ என்ன ஆளுங்க. அறிவில்லையா உங்களுக்கு” என்று அவர்களையும் திட்டியுள்ளார். ஐந்து நிமிடம் காலதாமதமான காரணத்தினால் அனை வரின் முன்பும் பிரம்பால் காயம் ஏற்படும் அள வுக்கு அடித்தார். இதனால் ஏற்பட்ட காயத்தின் கார ணமாக குலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து எங்களது பெற்றோருடன் தலைமை ஆசிரி யரை பார்த்து முறையிட்ட போது நான் அப்படித் தான் அடிப்பேன்; உங்க குழந்தைங்க ஒழுக்க மாக இல்லை; உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க, என்கிறார். எங்களது பெற்றோர் முன்னிலையிலும் இதுபோன்றே பேசியதால் கடும் உளைச்சலுக்கு உள்ளானோம் இதற்கு காரணமான தலைமை ஆசிரியர் மீது வன் கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர். முன்னதாக, மாணவிகளுடன் அவர்களின் பெற் றோர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், இந்தியா மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜுல்பிகர், மாநிலக்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகாக்குழு உறுப்பினர் சஞ்சய் பிர தாப் ஆகியோர் உடனிருந்தனர்.

விமான சேவைகள் பாதிப்பு

கோவை, டிச.5 – சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புதிய உத்தரவு காரணமாக, கோவை சர்வதேச விமான நிலை யத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கோவை விமான நிலையத்திலிருந்து சராசரியாக நாளொன்றுக்கு 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக் கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “விமானத் தில் பயணிகள் தவிர விமானிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழு ‘கேபின் க்ரூ’ என்று அழைக்கப்படுகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கேபின் க்ரூவுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தி யுள்ளது. ஏற்கனவே 36 மணி நேர ஓய்வு வழங்கப்பட்ட நிலை யில், தற்போது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத னால் சில விமானச் சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமானிகள், பணியாளர்கள் தயாராக இருந் தாலும், புதிய விதிமுறைகளால் பணி செய்ய முடிய வில்லை” என்றனர். கோவை விமான நிலையத்தில் சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு 5 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இந்தப் புதிய விதிமுறைகள் நவம்பர் 1 முதல் அமலான தால், நாடு முழுவதும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.