இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்</strong></p>
<p>புதுக்கோட்டை, டிச.1- இலவச வீட்டு மனைப் பட்டாவும், இலவச வீடும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் 5 ஆவது மாவட்ட மாநாடு, புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம். தங்கவேல் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை துணைத் தலைவர் கே. சண்முகம் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாநாட்டில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி விதொச மாநிலச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எல்.வடிவேல், மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி நிறைவுரையாற்றினார். தலைவராக எம்.தங்கவேல், செயலாளராக எம். கணேஷ், பொருளாளராக பி.மாலதி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். எம்.சி.லோகநாதன் நன்றி கூறினார். மாற்றுத் திறனா ளிகளுக்கு இதர மாநிலங்களைப் போல உதவித் தொகையை ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டாவும், இலவச வீடும் அரசு வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
