புதுக்கோட்டை: பழங்குடியின மாணவிகள் காயம் - பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!
yesterday
<p>புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை கீழே தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை, கூட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி பேருந்தில் இருந்து கீழே இறங்கச் சொல்லியதாக கூறப்படுகிறது. மாணவிகளை வலுக்கட்டாயமாக இறக்கிவிட நடத்துநர் பேருந்து கதவை திறந்தபோது, மாணவி பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். இதில், 8 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இச்சம்பவத்தை கண்டித்து அந்த பழங்குடியின கிராம் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் அர்ஜுனன், நடத்துநர் மணிகண்டன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.</p>
