10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை; ' தஞ்சை மாவட்டம் 3-ஆவது இடம் பிடித்து அசத்தல்!
21 May 2026, 10:57 pm

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை; '

தஞ்சை மாவட்டம் 3-ஆவது இடம் பிடித்து அசத்தல்!

புதுக்கோட்டை/தஞ்சாவூர்,மே 21- நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், தமிழ் நாட்டிலேயே 97.57 சதவீத தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் 97.41 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்து மிகப்பெரிய எழுச்சியைப் பதிவு செய்துள்ளது.

பாய்ச்சல் வேகத்தில் புதுக்கோட்டை முதலிடம்! கடந்த சில ஆண்டுகளாகப் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டம், இந்த ஆண்டு கல்வித் துறையில் அசுர பாய்ச்சலை மேற் கொண்டு ஒட்டுமொத்த தமிழ கத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. கடந்த 2023-24 கல்வி ஆண்டில் மாநில அளவில் 23-ஆவது இடத்திலும், 2024-25 கல்வி ஆண்டில் 25-ஆவது இடத் திலும் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், தற்போதைய பொதுத் தேர்வில் அனைத்துத் தடைகளை யும் உடைத்தெறிந்துவிட்டு முத லிடத்திற்கு முன்னேறி முத்திரை பதித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 335 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 22,337 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.53 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.53 ஆகவும் உள்ளது

. சராசரியாக 97.57 சதவீதம் தேர்ச்சிபெற்று மாநி லத்தின் உச்சிக்குச் சென்றுள்ளது புதுக்கோட்டை. 174 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்த அசாத்திய சாதனைக்குக் காரணமாய், மாவட்டம் முழுவதும் உள்ள 174 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன

. இதில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீரமங்கலம் அரசு மக ளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியவை அடங்கும்.

குறிப்பாக, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என எளிய பிள்ளைகள் படிக்கும் 105 பள்ளிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது கூடுதல் பெருமிதத்திற்குரியது.

மேலும், கடந்த ஆண்டுகளில் சில பள்ளி கள் 70 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு பள்ளிகூட 70 சதவீதத்திற்குக் கீழ் செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மைக் கல்வி அலுவலருக்குப் பாராட்டு மழை மாவட்டத்தின் இந்த இமாலய சாதனையைத் தொடர்ந்து, புதுக் கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகத்தை பள்ளிக் கல்வி இயக்குநர் சால்வை அணிவித்து நேரில் வாழ்த்திப் பாராட்டினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் எம்.வீரமுத்து, மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அ.மண வாளன் ஆகியோர் பங்கேற்றனர்.

தனது நன்றியைப் பதிவு செய்த முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், “மாவட்ட ஆட்சி யரின் அறிவுரைகளின் படியும், பள்ளிக் கல்வித்துறை இயக்குந ரின் வழிகாட்டுதலின்படியும் இத்த கைய சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைத்த கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்தச் சாதனையை இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் மு.வாசுதேவன், செயலாளர் இரா.வசந்தகுமார் ஆகியோர் மன தாரப் பாராட்டி அறிக்கை வெளி யிட்டுள்ளனர்.

அதில், “அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதி களை இன்னும் மேம்படுத்தி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய குடும்பத்து குழந்தைகள் மேலும் பல சாதனைகளைப் படைப்பா ர்கள்.

அதற்கு மாநில அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

3-ஆவது இடத்தைப் பிடித்து தஞ்சை எழுச்சி! தஞ்சாவூர் மாவட்டமும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவு களில் மிகப்பெரிய வரலாற்று எழுச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு 12-ஆவது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 15-ஆவது இடத்திலும் இருந்த தஞ்சை மாவட்டம், இந்த ஆண்டு 97.41 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 408 பள்ளிகளில் இருந்து மொத்தம் 29,618 பேர் தேர்வு எழுதியதில், 28,851 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 230 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அபார மாக உயர்ந்துள்ளது.

கடந்த முறை 88 அரசுப் பள்ளிகள் மட்டுமே நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், இந்த முறை அது 116 ஆக உயர்ந்து தஞ்சை மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளது. (ந.நி.)