புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி
27 Sept 2026, 10:31 pm

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவர் ரம்யாவின் மருத்துவக் குழு, பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொன்- புதுப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 40 மாணவிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.