புதுக்கோட்டையில் ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ ஆவணப்படம் திரையிடக் காவல்துறை தடை
1 Jun 2026, 9:33 pm

புதுக்கோட்டையில் ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ ஆவணப்படம் திரையிடக் காவல்துறை தடை

தமுஎகச மாநிலக்குழு வன்மையான கண்டனம்!

புதுக்கோட்டை, ஜூன் 1- புதுக்கோட்டையில் ‘திருப்பரங் குன்றம் பைல்ஸ்’ என்ற ஆவணப் படத் தைத் திரையிடுவதற்குப் புதுக் கோட்டை நகரக் காவல்துறை தன்னிச் சையாக எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுக்கோட்டை ‘வீதி’ கலை இலக்கி யக் களம் சார்பில், “அறக் கலகம்” தயாரித்துள்ள ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விவாதக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியப் பணிகளை ஆற்றி வரும் இவ்வமைப்பின் 144-ஆவது நிகழ் வாக, எழுத்தாளரும் ஊடகவியலாள ருமான பாரதிதம்பியின் பொறுப்பில் இந்நேர்காணல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

‘மேலிட உத்தரவு’ எனக் கூறி தடுத்த போலீஸ்

முதலில் தனியார் விடுதி ஒன் றில் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சிக்கு முதல் நாள் மாலை காவல்துறை யினர் அவ்விடுதி நிர்வாகியை அணுகி, படத்தைத் திரையிட்டால் பல இடையூறு கள் வரும் என்று கூறி நெருக்கடி கொடுத்தனர். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடத்தை மாற்றி, அறிவியல் இயக்கக் கட்டிட அரங்கில் நடத்த முடிவு செய்தனர். ஆனால், அங்கு நிகழ்ச்சி தொடங்க இருந்த நேரத்தில் புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் பூர்விகா தலைமையிலான போலீசார் திரண்டு வந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்ப டும் எனக் கூறி படத்தைத் திரையிடக் கூடாது எனத் தடுத்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே சென்னையில் வெளியிடப்பட்டு, தற்போது வரை யூடி யூப் தளத்தில் ஆயிரக்கணக்கா னோரால் பார்க்கப்பட்டு வரும் ஒரு படத்தை, அரங்கிற்குள் 20-30 பேர் பார்ப்பதற்கு ‘மேலிட உத்தரவு’ எனக் கூறி காவல்துறை தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தடைக்கு மத்தியிலும் செல்பேசி மூலம் விவாதம்

காவல்துறையினரின் தடையைத் தொடர்ந்து திரையிடல் நிறுத்தப்பட்டா லும், நிகழ்விற்கு வந்திருந்தோர் தங்க ளின் செல்பேசிகள் வழியாகவே யூடியூப் பில் அப்படத்தைப் பார்த்துவிட்டு, அது குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதக் கூட்டத்தை நடத்தினர். புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ தலைமை யில் நடைபெற்ற இவ்விவாத நிகழ்வில் எழுத்தாளர் பாரதி தம்பி, ஆவணப்பட இயக்குநர்கள் தவம், தமிழ்தாசன், தமுஎகச, வீதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மக்கள் ஒற்றுமையைக் காக்கும் வகையில் சிறப்பாகப் படம் எடுத்த இயக்குநர்களைப் பாராட்டிய தோடு, அங்கேயே வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.6,500 அவர்களுக்கு நன் கொடையாக வழங்கப்பட்டது.

தமுஎகச மாநிலக்குழு கண்டனம்

இத்தடை குறித்துத் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், பொதுச்செயலாளர் களப் பிரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில், “மக்கள் ஒற்றுமை, மத நல்லி ணக்கத்திற்காகப் பாடுபட வேண்டிய காவல்துறை இப்படித் தன்னிச்சை யாகச் செயல்பட்டுக் கலைப் படைப் பைத் தடுத்து நிறுத்துவதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். சமூகக் கருத்துகளை முன்வைக்கும் சில சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் கண்டிர் துள்ள நிலையில், இது போன்ற நடவடிக் கைகளை அரசு தொடரக்கூடாது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமி ழக முதல்வர் திரைத்துறையிலிருந்து வந்தவர்; அம்பேத்கர், பெரியாரைத் தனது வழிகாட்டியாகக் கூறிக்கொள் பவர். எனவே, அவரும் அவரது அர சும் இதுபோன்ற மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் கலைப் படைப்பு களைத் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் திரையிட்டு விழிப்பு ணர்வை வளர்க்க உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளனர்.