புதுக்கோட்டையில் வாலிபர் சங்கத் தலைவர்கள் மீது நள்ளிரவில் போலீசார் தாக்குதல்ஆய்வாளர் பணியிட மாற்றத்தால் முற்றுகைப் போராட்டம் வாபஸ்!
2 hours before

புதுக்கோட்டையில் வாலிபர் சங்கத் தலைவர்கள் மீது நள்ளிரவில் போலீசார் தாக்குதல்ஆய்வாளர் பணியிட மாற்றத்தால் முற்றுகைப் போராட்டம் வாபஸ்!

புதுக்கோட்டை, ஆக. 6- புதுக்கோட்டையில் வாலிபர் சங்கத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மற்றும்சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்வெகுஜன அமைப்புகள் சார்பில் நடைபெற்று வந்த காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.நள்ளிரவில் நடந்த அராஜகத் தாக்குதல்புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினர்களுக்கு உணவுவாங்குவதற்காக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், சுகுமாரன் ஆகியோர் புதன்கிழமை இரவு நகருக்கு வந்துள்ளனர். அவர்களை மறித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சற்குணம், குற்றவாளிகளைப் போல அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். தகவல் அறிந்துகாவல் நிலையம் சென்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நித்திஷ்குமாரை அவர் தகாத வார்த்தைகளால் திட்டித்தாக்கியுள்ளார்.

இதனைத் தட்டிக் கேட்கச் சென்ற வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்எஸ். ஜனார்த்தனனைக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, சட்டையைக் கிழித்து கொலைவெறி யுடன் காவலர்கள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் திருக்கோகர்ணம்காவல் ஆய்வாளர் அப்துல்லாவின் முன்னிலையில்தான் நடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஜனார்த்தனனிடம் வாக்குமூலம் பெறவோ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ காவல்துறையினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.காவல்நிலைய முற்றுகைப் போராட்டம்இதனைக் கண்டித்து வியாழக்கிழமை காலை சிபிஎம், வாலிபர் சங்கம்,மாதர் சங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட கூடுதல் எஸ்பி முரளிதரன், டிஎஸ்பி பிருந்தா உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில், சிபிஎம் மாவட்டச்செயலாளர் எஸ்.சங்கர் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். இதில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, ஒரு வாரத்திற்குள்ஆய்வாளர் அப்துல்லா, சிறப்பு உதவி ஆய்வாளர் சற்குணம் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்வது என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.