நரிக்குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ், பட்டா கேட்டு புதுக்கோட்டையில் காத்திருப்புப் போராட்டம்
13 Jul 2026, 9:00 pm
<p>புதுக்கோட்டை, ஜூலை 13 புதுக்கோட்டை மாவட்ட நரிக்கு றவர் மக்களுக்கு இந்து ஆதியன் சாதி சான்றிதழ் மற்றும் குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ரெங்கம்மாள் சத்திரம், கீரமங்கலம் அறிவொளி நகர், அறந்தாங்கி, மணமேல்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு இந்து ஆதியன் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை மறுப்பதால், பிள்ளைகளின் கல்வி மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், இவர்களின் குடியிருப்புப் பட்டா கோரிக்கையும் நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் சி. அன்புமணவாளன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி யின் அகில இந்திய துணைத் தலை வர் கே. சாமுவேல்ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மூத்த தோழர் பெரி. குமார வேல், மாவட்டப் பொருளாளர் சி. ஜீவானந்தம், சிபிஎம் மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் பங்கேற்ற இப்போராட்டத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மேய்ச்சல் புறம்போக்கு இடத்தை வகைமாற்றம் செய்து பட்டா வழங்குவது, கந்தர்வ கோட்டை பெரியகுளத்தில் வசிப்போருக்கு மாற்று இடம் தேர்வு செய்து இலவச வீடு தருவது, காமராஜபுரத்தைச் சேர்ந்த வசந்தி, அஞ்சுகம் ஆகியோருக்கு உடனடியாகவும், மீதமுள்ள 77 பேருக்கு ஆய்வு செய்தும் சான்றி தழ் வழங்குவது என ஆட்சியர் உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.</p>
